பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவேந்தர் தொடர்பு 83 என்று தாம் கண்ட காட்சிகளைத் தொகுத்துப் பர்டி இன்புற்ருர், - நெல் வயல்கட்கு அண்மையில் உள்ள திடர்களில் நெற் போர்க்களம் அமைக்கப்பட்டிருந்தது. அக்களத்தின் விளிம்பில் தென்னைகள் காய்த்துப் பழுத்த குலைகளைத் தாங்கி கின்றன. இடையிடையே பனேகளும் கின்றன. அவற்றினிடத்தும் பனம்பழங்கள் பழுத்திருந்தன. இவை களைச் சேர, உழவர் நெற் சூடுகளே படித்துப் போர்விட் டிருந்தனர். அவை மீளவும் கடா விடு தற் குரியவை யாகையால் கலே குவிக்கப்படவில்லை. அவ்விடத்தே உழவருடைய இளஞ் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந் தனர். அச் சிறுவர்களின் தலைமயிர் நெய்ப்பசையின்றி உலறிச் செம்பட்டை யுற்றுப் புல்லிதாயிருந்தது. இப் புன்றலச் சிருர் தென்னேயின் பழுத்த பழங்களைப் பறித்து உடைத்து அதனுடைய தீவிய நீரையுண்டு உள்ளீட்டை வெறிக்கத் தின்றனர். பின்பு, அவர்கள் போர் அருகே கிற்கும் பனேகள் பழம் தாங்கி நிற்பது கண்டு போர்வின் மேல் ஏறி அப் பனம்பழங்களைத் தொட முயன்று கொண்டிருந்தனர். இவ்வண்ணம் நாடோறும் புதிய புதியவாய் காட்டில் பெறப்படும் வளங்களைக் குமரஞர் கண்டு இன்புற்ருர். இப்புது வருவாய் நலத்தை, வன்கை வினைஞர் புன்றலைச் சிருர், தெங்குபடு வியன் பழம்' முனையின் தந்தையர், குறைக்கண் நெடும் போரேறி விசைத் தெழுந்து, செங்கோள் பெண்ணேப் பழங்கொட முயலும், வ்ைகல்யாணர் கன்னடு எனப் பாடி மகிழ்ந்த மனத்தினரானர். - - - இவ்வாறிருக்கையில் சோழன் சேட் சென்னியின் ஆண்மை வில்லாண்மை முதலிய கலங்களையும் மதுரைக் குமானுர், அறிந்துவந்தார். போர்களும் அடிக்கடி ன்ே. சேட் சென்னியே வென்றி மேம்பட்டான். பகைத்துப் போந்த பேரூர் வேந்தரும் சீறார் வேந்தரு மாகிய பலரும் தோற்றழியக் கண்டாமே யன்றிக் குமரனுர் அவர்கள் வென்றியோடு மீளக் காணவே