பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோளுடு 31 மக்கட்கு வழங்குவோர், இலரானது தமிழகத்திற்கு இடைக்காலத்தில் நேர்ந்த கேடுகளுள் ஒன்று. ஆயிரத் கைஞ் நூற்ருண்டுகட்கு முன்னர் வாழ்ந்தவரான திருமூல ரென்னும் சான்ருேர் மக்களே ! நடமாடுங் கோயில்கள் : என்றும், ஞானமுண்டாக்குதல் நலமாகும் காட்டிற்கே ’ என்றும் அறிவுறுத்தினர். ஆயினும் அக்கருத்துக்கள், தமிழ்க்கல்வி நாட்டவரிடையே முதன்மை இழந்ததனுல் மறைந்துபோயின. நூலளவில் இருந்து வேறு செயல் கட்கு மேற்கொள்ளப்படுவவாயின. . . . . . இத்தனிக் தமிழ் நாட்டிலும் இன்றும் ஆண்மக்கள் பெண்மக்களைவிடத் தொகையில் குறைந்தே இருக்கின் றனர். இரண்டாயிர மாண்டுகட்கு முன்புண்டான குறைவு இன்னும் கிறைவாகவே இல்லை. அக்குறைவை நிறைவாகாவாறு செய்யும் போரும் ஒழியவே இல்லை. நிலவுலக முழுதும் இக்குறை இப்போது உண்டாய்விட் டது. மக்களுலகு இதற்கான முறை காண்பதற்கு முயன்றுகொண்டே யிருக்கிறது. இனி இதற்கு வேறு காரணமும் 1921-ம் ஆண்டில் மக்கள் தொகையினக் கணக் கெடுத்த . . மார்ட்டின் என்பவராற் கூறப்படுகிறது. 1877-ஆம் ஆண்டில் இந்நாட்டில் உண்டாகிய பெருவறத் தால் ஆண்மக்கள் மிகுதியாக இறந்தனர்; ஆடவரிலும் மகளிருடைய உடற்கூற் பசியைப் பொறுத்தலில் ஆற்ற அடையதர்தலின், மகளிர் தொகை மிகுவதாயிற்றென்றும், * மங்கோலியர் திராவிடரினத்து உடன்மை மிக்குள்ள மக்களிடையே பெண் பிறப்பு மிகுதியுமுண்டு’ என்றும் கூறினர். இத் தனியாசின் சார்பாக மக்கட் கணக்கெடுத்த அரசியல் அலுவலாளர், இக்கணக்கையெடுத்துப் பெண் மக்களின் தொகை மிகுதிக்கேதுவாவனவற்றை ஆராய்வ தற்கு வேண்டும் விரிவான வசதிகளில்லே ' என்றும், ' கிடைத்துள்ள கருவிகளும் இவ்வாராய்ச்சிக்குத் துணை. செய்யக்கூடிய அவ்வளவிலும் இல்லே' யென்றும் குறிக் கின்ருர், - 1. கொடும் பஞ்சம்.