பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

குயிலும்...சாரலும்

குயில் குரங்கையும் மாட்டையும் புகழ்ந்து மாந்தர் இனத்தைக் கிண்டல் செய்கிறது. ஆங்கிலேயன், இந்திய மக்கள் நிலையை எடுத்துக் கூறிக் கிண்டல் செய்கிறான்.

இந்தக் கிண்டல் மொழிகளைக் கேட்டு வஞ்சியும் குப்பனும், துன்புறுகின்றனர். ஆனால் அதிலேயும் வஞ்சிக்கு ஒரு மகிழ்ச்சி. நம் நாடு உள்ள நிலையை இப்போதாவது சிந்தித்து அறிய முடிந்ததே என்பதுதான்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மேயோ என்ற வெள்ளைக் காரியொருத்தி இந்தியாவுக்கு வந்து இமயம் முதல் குமரி வரை சுற்றிப் பார்த்து, நம் மக்களிடம் பரவியுள்ள அறியாமை, மூடநம்பிக்கை, சாதிப்பிரிவுகள், மூடச் சடங்குகள், பிற்போக்கான பழக்க வழக்கங்கள், ஏற்றத் தாழ்வான சமுதாய அமைப்பு முறை, மதமும் சாதியும் கொண்டுள்ள தீய ஆதிக்கம், பூசுரர்கள் மக்களை ஒடுக்கி வைத்திருந்த முறைகள் அனைத்தையும் ஒன்று விடாமல் எழுதினாள். அதைக் கண்ட நம் மேல்சாதித் தலைவர்கள் மேயோ இந்தியாவில் உள்ள குப்பைகளை மட்டுமே திரட்டியிருக்கிறாள். மேன்மைகளும் நன்மைகளும் அவள் கண்ணில் படவேயில்லை என்று மறுப்பு எழுதினார்கள். ஆனால், அவள் சுட்டிக் காட்டிய குப்பைகளை நீக்க முயன்றார்களா என்றால், இன்றுவரையிலும் இல்லை என்றே கூறலாம். அவள் சுட்டிக் காட்டியது தான் அவர்களுக்குக் குற்றமாகப் பட்டதே தவிர, அதை நீக்கி நாட்டில் புத்துணர்ச்சியும், புது வாழ்வும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பிறக்கவே இல்லை. பெரியாரும் அம்பேத்காரும் தான், மேயோ திரட்டிய குப்பைகளை யகற்ற வேண்டும் என்றும், தீயிட்டுப் பொசுக்க வேண்டும் என்றும் பிரசாரம் செய்தார்கள். பெரியார் குப்பைகளைக் கொளுத்தியே விழிப்புணர்வைத் தூண்டினார். பெரியார் வழியில் புரட்சிக் கவிஞர் பாரதி