பக்கம்:சுதந்திரமா.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 சுதந்தரமா !

கொண்ட செய்திகளை அவர் மூளையில் திணித்து வைத்துக் கொண்டிருப்பார். நான் ஏதாவது சொன்னல் அவர் ஒன்று சொல்வார். ஆகையால் விமானப் பிரயாணம் எல்லோரும் செய்ய முடியுமா என்ற ஆராய்ச்சியிலே புக நான் விரும்பவில்லை. நான் விமானத்தில் சென்று வந்த செய் தியை விளம்பரம் செய்யவேண்டும். அதுதான் என் ஆசை. 'என்ன இருந்தாலும் விமானப் பிரயாணம் விமானப் பிரயாணந்தான்' என்றேன்.

அந்தப் பேர்வழி, 'அப்படியா ! எப்படி இருந்தது ?" என்று ஆவலோடு என்னேக் கேட்பாரென்று கினைத்தேன். அவரோ, "பின்னே எப்படி இருக்கும்?" என்று கிண்ட லாகப் பேசினர். - - -

"அதற்காகச் சொல்ல வரவில்லை. காசு போனலும் அதற்கேற்ற சகம் இருக்கிறது என்று சொல்கிறேன்."

"காசு தெருவில் கிடக்கிறதா?" என்று அவர் மறுபடி யும் என்னேப் பொருளாதார உலகத்துக்கு இழுத்தார்.

'காசு கிடைத்தவர்களெல்லாம் விமானத்தில் போகி ருர்களா? விமானப் பிரயாணம் சுகத்துக்குச் சுகம்; எவ் வளவு காலம் மிச்சமாகிறது? நீங்கள் இரண்டு நாள், நாற்பத்தெட்டு மணி நேரம் கஷ்டப்பட்டு வந்திருக்கிறீர் கள். இந்த இரண்டு நாளில் எத்தனையோ வேலைகளைச் செய்து விடலாம். சிறைக்குள் இருப்பதுபோல ரெயில் பெட்டிக்குள் அடைந்து கிடக்கவேண்டும். அதற்கு எவ் வளவு பொறுமை வேண்டும்?" - -

அதை ஏன் கேட்கிறீர்கள்? நான் சரியாக மாலை 6-30 மணிக்கு டில்லியில் ஏறினேன். வண்டி பழைய டில்லி யிலிருந்து புறப்படுகிறது......நீங்கள் டில்லிக்குப் போயிருக்" கிறிர்களோ? " . . . . . . . . . .

“@ຄໍຂຶ້ນ.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/76&oldid=685983" இலிருந்து மீள்விக்கப்பட்டது