பக்கம்:ஏழாவது வாசல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54ஏழாவது வாசல்

திசைகளிலிருந்தும் மக்கள் அங்கு வந்து கூடியிருக்கிறார்கள். அவர்களை வேட்டையாடத் தான் புறப்பட்டுப் போகிறேன்” என்று பதிலளித்தது வாந்திபேதிப் பிசாசு.

இதைக் கேட்டதும் அந்தப் பக்கிரிக்குப் பெருஞ் சினம் உண்டாயிற்று.

“சீச்சி! மூர்க்கப் பிசாசே! மக்கத்தில் இப்பொழுது சிறந்த பக்தர்கள் திரண்டிருப்பார்கள். அவர்கள் அல்லாவைத் தொழும் பொருட்டு வந்தவர்கள். அவர்களைப் போய் நீ கொல்ல நான் இடங் கொடுக்க மாட்டேன். போ! பேசாமல் திரும்பிப் போ! இன்னொரு முறை உன்னைக் கண்டால் சுட்டு எரித்து விடுவேன்” என்றார் பக்கிரி.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த வாந்தி பேதிப் பேய் பக்கிரியைப் பார்த்துச் சொல்லியது.

‘சாமியாரே, என்னைப் படைத்தவரும் அல்லாதான். மனித உயிர்களை வாரிக் கொண்டுபோகும் தொழிலுக்கென்றே என்னை அல்லா உண்டாக்கியிருக்கிறார். எனக்கென்று அல்லா வகுத்த தொழிலைச் சரியாகச் செய்ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழாவது_வாசல்.pdf/56&oldid=994029" இலிருந்து மீள்விக்கப்பட்டது