உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவெம்பாவை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன் அடியார் எம் கணவர் ஆவாரி 45

நின்று பணி செய்தால் சில சமயங்களில் சலிப்பு உண்டாகும். அப்படியின்றிக் கூட்டத்திலே சேர்ந்து திருப்பணி செய்தால் எல்லோரும் ஊக்கமாக அந்தப் பணியைச் செய்வார்கள். ஆகவே அடியார்களுடைய தொடர்பு தமக்கு வேண்டு மென்று சொல்ல வருகிருர்கள். -

உன்னுடைய அடியார்களின் தாளை நாங்கள் பணி வோம். அவர்களுக்குப் பக்குவமான காரியங்களே நாங்கள் செய்வோம்.’’

உன்அடியார் தாள்பணிவோம்; ஆங்கவர்க்கே

பாங்காவோம்.

"அவர்கள் எங்களுடைய பக்குவத்தை அறிந்து எங்களிடம் அன்பு காட்டுவார்கள். அதன்மேல் அவர்களே எங்களே மணந்துகொள்வார்கள்.’’

அன்னவரே எம்.கணவர் ஆவார்.

"எங்களுடைய கணவன்மார்களின் உள்ளம் அறிந்து அவர்கள் சொல்லுகின்ற வழியே தொழும்பாக நாங்கள் பணி செய்வோம். அவர்கள் உன்னுடைய பக்தர்கள் ஆகையால் அவர்கள் சொல்வன எல்லாம் உன்னுடைய திருப்பணியைச் சார்ந்தே இருக்கும். அவர்கள் எங்களை ஏற்றுக்கொண்டு, எங்கள் பண்பை உகந்து சொல்வன எல்லாம் உன்னுடைய தொழும்பாகவே இருக்கும். நாங்கள் அந்தப் பணிகளை விடாமல் செய்வோம்.”

அன்னவரே எம்.கணவர் ஆவார்; அவர்உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப்.பணிசெய்வோம்.

"அத்தகைய பெரிய பேறு எங்களுக்குக் கிடைக்குமாறு நீ அருள் செய்யவேண்டும். எம்முடைய தலைவனகிய நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/46&oldid=579239" இலிருந்து மீள்விக்கப்பட்டது