உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவெம்பாவை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. எண்ணிக் குறையில் துயில்

அடுத்த வீட்டுக்கு வருகிரு.ர்கள். அங்குள்ளவர் கண்ணைத் திறக்காமல் நன்ருகச் சிரித்துக்கொண்டு இருக் கிருள். முன்பு முத்தன்ன வெண்நகையை உடையவளே என்று விளித்தார்கள். இப்போது வெளிச்சம் அதிகமாகி விட்டமையால், நன்ருகச் செவ்வைப் படுத்தப்பட்ட முத்துக்களைப் போலச் சிரிக்கிறவளே' என்று அழைக்கிருள்.

ஒள் கித்தில நகையாய்!

'கண்ணே முடிக்கொண்டிருக்கிருயே, இன்னும் விடிய வில்லையா?' என்று கேட்கிருள்.

ஒள்கித் திலங்கையாய் இன்னம் புலர்ந்தின்ருே?

சில சமயங்களில் கோவில் திருவிழாவுக்கு வீதியில் உள்ள வர்கள் சேர்ந்து போவார்கள். ஒருத்தரை அவர்கள் அழைத்தால் அவர் கேட்பார், 'எல்லாரும் வந்துவிட்டார் களா?' என்று. அதாவது யாவரும் வந்த பிற்பாடு, அவர் களோடு நானும் வருகிறேன் என்ற பொருளில் சொல்வார் கள். அதுபோல் இவள், அழகிய கிளி போன்ற மொழியை உடைய பெண்களே, எல்லோரும் வந்துவிட்டார்களா?” என்று கேட்கிருள். கண்ணே மூடிக்கொண்டிருப்பதனால், குரலினலே இனம் கண்டு கொண்டு கிளி மொழியார்" என்கிருள். சிலர் குரல் கேட்கவில்லை. ஆகையால் கிளிமொழி என்ற சொல்லாலே இனம் காட்டுகிருள். -

வண்ணக் கிளிமொழியார் ள்ல்லாரும் வங்தாரோ?

வந்தவள் சொல்கிருள். ...நாங்கள் யார் யார் வரவில்லை என்று இதுவரைக்கும் யோசிக்கவில்லை. இப்போது நாங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/20&oldid=579213" இலிருந்து மீள்விக்கப்பட்டது