பக்கம்:திருவெம்பாவை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 திருவெம்பாவை

எண்ணிக்கொண்டு எவ்வளவு பேர் வந்திருக்கிருேம் என்று சொல்கிருேம். அது வரைக்கும் நீ தூங்கலாம் என்று

நினைக்காதே. வீணுகக் காலத்தைப் போக்காமல் இறைவனைப்

புகழ்ந்து பாடுவாயாக’’ என்கிருள்.

எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம்; அவ்வளவும் கண்ணத் துயின்றுஅவமே காலத்தைப் போக்காதே

என்று சொல்லி, இறைவனைப் பாடுவாயாக என்று சொல் கிறவள் இறைவனது பெருமையைச் சொல்கிருள். தேவர் உலகத்திற்கு ஒப்பற்ற தனி அமுதமாக இருப்பவனே, வேதத்தின் விழுமிய பொருளாக உள்ளவனே, கண்ணுக்கு இனியவனப் பாடி மனம கசிந்து, உள்ளம் நெக்குருக நின்று உருகுவாயாக' என்று சொல்ல வந்தவள். :

விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக்கு இனியானப் பாடிக் கசிந்துஉள்ளம் உள்கெக்கு நின்றுஉருக -

என்று அவளுக்குச் சொல்கிருேமே, நாம் அத்தனை பேரையும் எண்ணிக்கொண்டிருப்புதல்ை. அவர்கள் தலையை எண்ணிக் கொண்டிருப்பதல்ை என்ன பயன் இருக்கிறது நமக்கு? என்ற எண்ணம் வரவே, "நாம் எண்ணமாட்டோம். வேண்டுமானல் நீயே வந்து எண்ணிப் பார். யாராவது குறைந்திருந்தால் நீ போய்த் தூங்கு' என்று சொல்கிருள். எல்லோரும் வந்த பிற்பாடு நான் வருகிறேன் என்று அவள் சொல்லிவிட்டாள் என்ற எண்ணத்தால் இவள் பேசுகிருள்.

கண்ணுக்கு இனியானப் பாடிக் கசிந்துஉள்ளம் உள்கெக்குகின்றுஉருக- யாம்மாட்டோம் நீயேவந்து எண்ணிக் குறையில் துயில்ஏலோர் எம்பாவாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/21&oldid=579214" இலிருந்து மீள்விக்கப்பட்டது