39
தலைவன் எவ்வழி நடக்கிறானோ, அவ்வழியே நடப்பதையன்றி அவர்களால் செய்யத்தக்க ஒன்றும் இல்லை.
பல நாளாக முற்றுகையிட்டிருந்தும் நெடுங்கிள்ளி கோட்டைக் கதவைத் திறவாமலே இருப்பதைக் கண்டபோது வெளியில் இருந்தவர்கள் அவனுடைய துணிவை எண்ணி வியந்தார்கள்; சிலர் அவனுடைய அறியாமையால் வீணே பல குடும்பங்கள் நாசமாகின்றனவே என்று இரங்கினார்கள்.
எல்லாரும் அமைதியாக வாழவேண்டும் என்ற நோக்கம் உடையவன் சோழன் நலங்கிள்ளி. முதுகண்ணன் சாத்தனார் இளமையிலிருந்தே அவனுக்குப் பகர்ந்த நல்லுரைகள் அவனை அப்படி ஆக்கியிருந்தன. இன்றியமையாத சமயங்களிலன்றிப் போரிடுவது தகாதென்றே அவன் உறுதியாக எண்ணினான். அவன் நினைத்திருந்தால் ஆவூர்க் கோட்டைக்குள் இருந்த நெடுங்கிள்ளியை வெளிவரச் செய்திருக்கலாம். போரைத் தொடங்குவது எளிது. ஆனால் அதை நடத்தி வெற்றி பெறுவதற்குள் இரு படையிலும் பலர் உயிர் இழப்பார்கள். ஆதலால் இயன்ற வரையில் போர் செய்யாமல் காலங்கடத்தவே அவன் விரும்பினான்
இப்போது நிலைமை வேறுவிதமாக இருந்தது. நெடுங்கிள்ளி கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டுவிடவில்லை. அங்கு இருப்பவர்கள் என்ன ஆனார்களோ! அவர்களைக் காப்பாற்றும் பொருட்