பக்கம்:கோவூர் கிழார்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

எல்லாருக்கும் நண்பர்கள்; யாருக்கும் அவர்களிடம் பகை இராது. புலவர்கள் பாடும் புகழை இவ்வுலகத்தில் பெறும் பேறுகளுக்குள் சிறந்ததாகவும், அவர்களாற் பாடப்பெறாமையைப் பெரிய குறையாகவும் தமிழ்நாட்டு மன்னர்கள் எண்ணினார்கள்.

ஆகவே, கோவூர் கிழார் நெடுங்கிள்ளியிடம் சென்றால் அவன் அவரை மதித்து உபசரிப்பான் என்பது யாவருக்கும் தெரியும். கோவூர் கிழார் கோட்டைக்குள் எப்படிச் செல்வது? சென்ற பிறகல்லவா நெடுங்கிள்ளியைக் கண்டு அறிவுரை கூறமுடியும்? அதற்கும் ஒரு தந்திரம் தோன்றியது, நலங்கிள்ளிக்கு. கோவூர் கிழார் நெடுங்கிள்ளியைப் பார்க்க விரும்புகிறார் என்ற செய்தியை ஒர் ஓலையில் எழுதி அதைச் சுருளாகச் சுருட்டி அம்பின் நுனியில் வைத்து அதைக் கோட்டைக்குள் எய்து வீழ்த்தினார்கள். கோட்டைக்குள் இருப்பவர்களுக்குச் சந்து செய்யும் யோசனையையும் மற்றக் கருத்துக்களையும் இந்த வகையாகத் தெரிவிப்பது பழங்கால் வழக்கம்.

ஓலை மதிலுக்குள் சென்று வீழ்ந்தது. நெடுங்கிள்ளியிடம் அந்த ஓலையை எடுத்துச் சென்று காட்டினார்கள். கோவூர் கிழார் வருவார் என்ற செய்தியை அவனுடன் இருந்த படைத் தலைவர்கள் அறிந்தார்கள். செய்தி கோட்டைக்குள் எங்கும் பரவியது. ஒரு வேலையும் இன்றிப் போதிய உணவும் இன்றிக் கோட்டைக்குள்ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/46&oldid=1111063" இலிருந்து மீள்விக்கப்பட்டது