பக்கம்:காதலும் கடமையும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፵0 காதலும் கடமையும் கேசவன்: சரி, விஷயத்தைச் சொல்-அவளெங்கே? அவளேயும் கூடவே அழைத்து வந்திருக்கலாமல்லவா? சரோஜா. அவளுந்தான் வந்திருக்கிருள். வெளி யிலே கதவருகில் உட்காரும்படி சொல்லிவிட்டு வந்தேன் கேசவன்: ஏன், அவளும் உள்ளே வரலாமே? சரோஜா ஒரு விஷயம் டாக்டர். இப்போ நாக வல்லியைப் பார்த்தால் அடையாளம் கண்டுகொள்வது கூடக் கஷ்டம். அவள் முகம் அப்படிக் கெட்டுப்போய் விட்டது. கேசவன்: நாகவல்லி முகமா? ஏன்? சரோஜா முதலில் அவளுடைய குழந்தைக்குப் பெரிய அம்மை வந்ததாம். பாவம், அந்தக் குழந்தைக்கு இரண்டு கண்களும் பார்வை இல்லாமல் போய்விட்டன. பிறகு இவளுக்கும் அம்மை வந்து இவளுடைய முகமே வடுவிழுந்து போய்விட்டது. கேசவன்: எப்போ அம்மை வந்தது? எனக்கு விஷயமே தெரியவில்லையே? சரோஜா வந்து இரண்டு மாதத்திற்கு மேலாகி விட்டது. இந்த நோய்க்கு வைத்தியம் பண்ணக்கூடா தென்று இங்கே வந்து சொல்லவில்லையாம். கேசவன்: வைத்தியம் செய்யாவிட்டாலும் சின் எச்சரிக்கைகளாவது செய்திருக்கலாமல்லவா? உனக் காவது விஷயம் தெரியுமா இல்லையா? சரோஜா எனக்கும் தெரியாது. குழந்தையைப் பால பிருந்தாவனத்திற்கு எடுத்துக்கொண்டு வரும்படி நாகவல்லியிடம் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு