இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வாழைக்காய் வேணுமா? வறுவலுக்கு நல்லது. கொத்தவரை வேணுமா? கூட்டுவைக்க நல்லது. பாகற்காய் வேணுமா? பச்சடிக்கு நல்லது. புடலங்காய் வேணுமா? பொரியலுக்கு நல்லது. தக்காளி வேணுமா? சாம்பாருக்கு நல்லது. இத்தனையும் வாங்கினால், இன்றே சமையல் பண்ணலாம். இன்றே சமையல் பண்ணலாம். இன்ப மாக உண்ணலாம். 30