இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
யானை வருது, யானை வருது பார்க்க வாருங்கோ. அசைந்து, அசைந்து நடந்து வருது பார்க்க வாருங்கோ. கழுத்து மணியை ஆட்டி வருது பார்க்க வாருங்கோ. காதைக் காதை அசைத்து வருது - பார்க்க வாருங்கோ. நெற்றிப் பட்டம் கட்டி வருது பார்க்க வாருங்கோ. நீண்ட தந்தத் தோடே வருது பார்க்க வாருங்கோ. தும்பிக் கையை வீசி வருது பார்க்க வாருங்கோ. தூக்கி 'சலாம் போட்டு வருது பார்க்க வாருங்கோ. - 26