இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாப்பா, பாப்பா, அழாதே ! பலூன் தாரேன்; அழாதே ! கண்ணே பாப்பா, அழாதே ! காசு தாரேன்; அழாதே ! பொன்னே பாப்பா, அழாதே ! பொம்மை தாரேன்; அழாதே ! முத்துப் பாப்பா, அழாதே ! மிட்டாய் தாரேன்; அழாதே ! என்ன வேண்டும் ? சொல் பாப்பா. எல்லாம் வேண்டுமோ ? சொல் பாப்பா. சரி சரி பாப்பா, தருகின்றேன். சிரி, சிரி, கொஞ்சம் சிரி, பாப்பா. 2