உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மலரும் உள்ளம்-1.pdf

பாப்பா, பாப்பா, அழாதே!
பலூன் தாரேன்; அழாதே!

கண்ணே பாப்பா, அழாதே!
காசு தாரேன்; அழாதே!

பொன்னே பாப்பா, அழாதே!
பொம்மை தாரேன்; அழாதே!

முத்துப் பாப்பா, அழாதே!
மிட்டாய் தாரேன்; அழாதே!


என்ன வேண்டும்? சொல் பாப்பா.
எல்லாம் வேண்டுமோ? சொல் பாப்பா.

சரி சரி பாப்பா, தருகின்றேன்.
சிரி, சிரி, கொஞ்சம் சிரி, பாப்பா.


21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/24&oldid=1700358" இலிருந்து மீள்விக்கப்பட்டது