பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
89

அதே சமயத்தில் இனிமேல் என்ன செய்வது என்பதையும் வேகமாக நினைத்து முடிவு செய்துகொண்டான.

அந்த இடத்திலிருந்து மேலும் பத்தடி கீழே இறங்க முடிந்தது. இப்பொழுது அவன் ஆற்று நீர்மட்டத்திற்குமேலே சுமார் இருபது அடியில் இருந்தான். அங்கிருந்து அப்படியே ஆற்றில் குதித்தான்; உயரத்திலிருந்து குதிப்பதும், ஆற்றில் நீந்துவதும் அவனுக்கு எளிதான விளையாட்டு. நல்ல வேளையாக மலைகளுக்கு இடையில் செல்லும் ஆறு மிகவும் ஆழமாக இருந்தது. குள்ளன் ஆற்று வெள்ளத்தோடேயே மிதந்து சென்றான். அவன் அப்போது ஓட்டத்தை எதிர்த்து நீந்தித் தன் கைகால்கள் ஒயும்படி செய்யவில்லை. ஆற்றோட்டத் தோடேயே போவதில் மிதந்துகொண்டிருப்பதற்கு மட்டும் அவன் கைகால்களைச் சற்று அசைத்தான். இவ்வாறு அவன் சுமார் கால் மைல் தூரம் சென்றதும் மலைப்பகுதி முடிவடைந்தது. ஆறும் பரவலாக ஓடியது. அதன் வேகமும் சற்றுக் குறைந்தது. அப்பகுதியிலே அவன் நீந்திக் கரையை அடைந்தான்.

தாழிவயிறனையும், அவனுடன் இருந்த மற்றொரு ஆளையும் கைது செய்த போலீஸ்காரர்கள் அந்தப் பகுதியில் தான் கரைக்கு வந்து, இரவெல்லாம் தங்கியிருந்தார்கள். அந்த இடத்திலிருந்து கொஞ்ச தூரத்தில்தான் தச்சுப்பட்டறை இருந்தது. ஆற்று வழியாகக் கொல்லிமலைக் குள்ளன் அங்கு வருவான் என்பதைத் தாழிவயிறனிடம் பல கேள்விகள் கேட்டு அவர்கள் அறிந்திருந்தனர்; அவன் திருடனோ,திருடனல்லவோ எப்படியிருந்தாலும் அவனையும் கைது செய்வதென்று அவர்கள் தீர்மானித்தார்கள். அவனையும் பிடித்துவிட்டால் தங்களுக்கு நல்ல வெகுமதியும், உத்தியோக உயர்வும் கிடைக்குமென்று. அவர்கள் நம்பினார்கள்.

அவர்கள் காலை பத்து மணிவரை மறைந்திருந்து பார்த்தார்கள். குள்ளன் வருவதாகத் தெரியவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியது. மேலும், தாங்கள் மேற்கொண்டுவந்த வேலையை அவர்கள் செய்து முடிக்கவில்லை. தங்கமணி முதலியவர்களை