இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9
“ஆம் ஆம்! போட்டி வைக்கலாம்" என்று இரண்டும் ஒப்புக் கொண்டன.
பகலவன் போட்டிக்கு விதி வகுத்தது.
பனிக்கட்டி ஓரிடத்தில் அசையாமல் நிற்க வேண்டும். காற்று தன் வலுவைக் கொண்டு அதை அசைக்க வேண்டும். அசைத்து விட்டால் காற்றுத்தான் வலுவானது என்று முடிவு செய்யலாம். அசைக்க முடியாவிட்டால்
பனிக்கட்டிதான் வலுவானது என்று தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் போட்டிக்கு இரண்டும் ஒப்புக் கொண்டன.