பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 இன்றன. இவற்றை ஐரோப்பியக் கவிகள் விலக்கி வைத்தது பிழை. ஆனல், பழைய தெய்வத்தையும், இயற்கையையும் மறந்து ய ந்திரங்களைப் பாடத் தொடங்கி ல்ை கவிதை செத்துப்போய்விடும். எலிச்குஞ்சு செட்டியார் : அது கிடக்கட்டும். நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதை ஆலோசனை பண்ணுங்கள். காக்கைக்கு 100 வயதென்று சொல்லு கிரு.ர்கள். அது வாஸ்தவமானல், தெய்வத்துக்குப் புத்தி யில்லையென்று நான் சொல்லுகிறேன். காக்கைக்கு 100 வயது, மனிதனுக்கும் 100 வயதா? அதிலேகூட மனிதனை விடக் காக்கையின் வயது கொஞ்சம் அதிக நிச்சயமாகத் தோன்றுகிறது. இதென்ன படைப்பு? குமாரசாமி வாத்தியார் : எலிக்குஞ்சு செட்டியாரே, உமக்கு இப்போது வயது 55 ஆகிறது. இதல்ை என்ன பிரயோஜனம்? காக்கை ஊரிலுள்ள அசுத்தங்களை யெல்லாம் நீக்கி இயன்றவரை வியாதிகளைக் குறைத்து மனிதருக்கும் மற்ற ஜந்துக்களுக்கும் நன்மை செய்கிறது. நீர் பை, பையாகப் பணத்தை உள்ளே போட்டு மூடி வைத்திருக்கிறீர். போன மாதம் ஒரு அவஸரத்துக்காக 50 ரூபாய் கடன் கேட்டேன். பொய் முகாந்தரம் சொல்லி மழுப்பி விட்டீர். உம்மால் யாருக்கென்ன பிரயோஜனம்? எலிக்குஞ்சு செட்டியார் : உம்மாலே உலகத்துக்கு என்ன நன்மை காணும், குமாரஸாமி வாத்தியாரே? அதை முதலாவது சொல்லும்......... இப்படி வார்த்தை சொல்லிக்கொண்டிருக்கும் போது, எலிக்குஞ்சு செட்டியார் வீட்டு வேலைக்காரன் ஒருவன் வாயில் நுரை தள்ளும்படி ஒடி வந்து, "ஐயா, நம்மவீட்டு வைக்கோல் போரிலே நெருப்புப் பற்றிக் கொண்டு எரிகிறது" என்று சொன்னன்.