பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பையன்
ஆமையாரே, ஆமையாரே,
எங்கே போகிறீர்?
அவசரமாய்ப் போகிறீரோ ?
சொல்லுமே ஐயா.

ஆமையார்
அருமையுள்ள பேரனுக்குத்
திருமணம் என்றே,
அவசரமாய்த் தந்திஒன்று
வந்த தப்பனே.

பையன்
வண்டி கட்டிச் சென்றி ருந்தால்
வசதி யாகுமே ?

ஆமையார்
வண்டி மாடு படுத்துக் கொண்டால்
நேர மாகுமே !

பையன்
காரில் ஏறிச் சென்றிருந்தால்
காற்றாய்ப் பறக்குமே ?

ஆமையார்
காட்டு வழியில் நின்றுவிட்டால்
மோச மாகுமே !

5

2960-1