உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோபம் கொண்டு அவனுமே
குதித்துக் கொண்டு எழுந்தனன்.
‘காகா, காகா கா’ வெனக்
கடுமை யாகக் கத்தின.

நாகம் போலச் சீறினன்;
நாயைப் போலப் பாய்ந்தனன்.
‘காகா’ என்றே திரும்பவும்
கத்திக் கொண்டே எழும்பின.

வேக மாக அவனுமே
விரட்ட எண்ணி ஓடினன்.
‘காகா காகா கா’ வெனக்
கதறிக் கொண்டே பறந்தன.

விரைந்தே அவனும் அவற்றினை
விரட்டிக் கொண்டே ஓடினன்.
துரத்திச் சென்றான். ஆதலால்,
சோம்பல் பறந்து போனதே!

தூக்கம் தன்னைப் போக்கவும்,
சுறு சுறுப்பாய் ஓடவும்
ஊக்கம் தந்த காக்கைகள்
உலகில் வாழ்க, வாழ்கவே!

42