முன்னும் பின்னும் 87.
மாதரசே பிழையேது செய்தேன் சுகுண (ராதே) எனைக் கணம் பிரிய மனம் வந்ததோ எங்கும் சென்றாலும் நான் உன்னை விடுவேனோ ஓடாதே படம் : சிந்தாமணி (1937), பாடலாசிரியர் : பாபநாசம் சிவன், பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்.
来
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி காதலியே தவறேது செய்தேன் - பிரிய (ராதே)
உனை மணம் புரிபவன் நானல்லவோ-நீ ஒன்றும் புரியாத சின்னஞ்சிறுமியோ, ஓடாதே. (ராதே) படம் : குலமகள் ராதை (1963), பாடலாசிரியர் : அ. மருதகாசி, பாடியவர் : டி.எம். செளந்தரராஜன், இசை : கே.வி. மகாதேவன்.
மங்கல மங்கையராய், மன்னவர் கன்னியராய்,
மைந்தர் வயிற்றினராய், வாழ்வின ராய்,அதிலே திங்கள் நிறைந்துவரும் சேயிழை யார்நடைபோல்
தென்றல் அசைந்துவரும் செந்தமிழ் நாடுடையாய்! கங்கையின் நன்கொழுநா! காவிரி யின்கணவா!
கன்னிதான் நாடுடையாய்! சென்னியின் நாயகமே! எங்கள் இளங்கொடிதான் உங்கள் இளம்பிறையால்
இத்தனை கோடி.இரா இப்படி வாடுவதோ, இதழ் : பஞ்சாமிர்தம், (1925) ஆடி, பழைய தனிப்பாடல் (சேது சமஸ்தான வித்துவான் பண்டிதர் ரா. இராகவையங்கார் கூறக் கேட்டது)
சின்னஞ்சிறு பெண்ணைப்போல
தென்னல் நடை போடுது மின்னல் வெட்டுங் கண்ணைக் கண்டு - மீனும் துள்ளி ஓடுது. படம் : வழி பிறந்தது (1964), பாடலாசிரியர் : மருதகாசி, பாடியவர் : பி. சுசீலா, இசையமைப்பாளர் : டி. சலபதிராவ்.
崇 உறவுமில்லை பகையுமில்லை ஒன்றுமே இல்லை உள்ளதெல்லாம் நீயேயல்லால் வேறே கதியில்லை இனி யாரும் துணை இல்லை. படம் : தேவதாஸ் (1953), பாடலாசிரியர் : கே.டி. சந்தானம், பாடியவர்: ஜிக்கி, இசை : சி.ஆர். சுப்புராமன்.