நையாண்டிப் புலவர் தனிப்பாடல்கள்
Appearance
பாடல் 5 தனிப்பாடல் திரட்டு மூலம் பக்கம் 118 & 119
பாடலுக்குக் குறிப்புரை – செங்கைப் பொதுவன்பாடல் 1
[தொகு]விருத்தம்
- விற்கம்பத் தடியாலும் அடியுண்டான் விண்ணவரை வேலை கொள்ளும்
- நற்கம்பத் தடியாலுந் தூக்க வசையான் ஆரூர் நாதன் கோயில்
- பொற்கம்பத் தடியினின்று வன்மீகத்தானை யுன்னிப் போற்றினோர்க்குச்
- சொர்க்கம்பத் தடியப்பான் மோக்ஷம் பத்தடியாகத் தோற்றுந்தானே. (1)
பாடல் 2
[தொகு]கட்டளைக் கலித்துறை
- செங்கை வரிச்சிலை தங்கமதைச் சம்புத்தீவு தன்னில்
- எங்கு வைத்தாலும் அப்பள்ளி கொண்டான் தமிழ்க் கீவனென்றே
- திங்கள் இரவி தினம் சுற்றிக் காக்கத் திரை சுருட்டுங்
- கங்கைக்கு முத்தரத்தே யொளித்தான் உமை காதலனே. (2)
பாடல் 3
[தொகு]- மேலாடை யின்றிச் சுவை புகுந்தால் இந்த மேதினியோர்
- நூலாயிரம் படித்தாலும் எண்ணார் நுவல் பாற்கடலோ
- மாலானவர் அணி பொன்னாடை கண்டு மகளைத் தந்தே
- ஆலாலம் ஈந்தது தோலாடை சுற்றும் அரன் தனக்கே. (3)
பாடல் 4
[தொகு]- வள்ளி கொண்டான் மயிலேறிக் கொண்டான் மதிபோலு மலை
- வெள்ளி கொண்டான் விடையேறிக் கொண்டான் வண்ணவர்க்கு அமுதம்
- துள்ளி கொண்டான் புள்ளில் ஏறிக்கொண்டான் சுபசோபனம் சேர்
- பள்ளி கொண்டான் புகழேறிக் கொண்டான் என்று பார்க்க வென்றே. (4)
பாடல் 5
[தொகு]எல்லீசு
- செந்தமிழ்ச் செலவனும் ஓராயிரம் தலைச் சேடனும் யாழ்
- சுந்தரத் தோடிசை வல்லோனும் யாவரும் தோத்திரஞ் செய்
- கந்தனைச் சொல்லுங் கவிராமச் சந்தரனைக் கண்டு வெட்கி
- யந்தர வெற்பிழி பாதாளத்தோடி யடங்கினரே. (5)