பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்குள் எலி 21 வல்லியம்மாள் நாளைக்குள் இந்தப் பங்களாவை விட்டுப் போய் விட்டால், நாளைய தினம் ராத்திரி சரியாக 10 மணிக்கு என்னுடைய தமயனார் இதே அறைக்கு வந்து நாளைய ராத்திரி முழுதும் உன்னோடுகூட சந்தோஷமாக இருக்கும்படி நான் செய்கிறேன். இது நிச்சயம்" என்று கூறினாள். அதைக்கேட்ட செளந்தரவல்லியம்மாள் கரைகடைந்த களிப்பும் ஆநந்தமும் அடைந்தவளாய் அந்த ஏற்பாட்டிற்கு இணங்கி, தான் உடனே கற்பகவல்லியம்மாளைத் துரத்தி விடு கிறது என்றும், புஷ்பாவதி மறுநாள் இரவு பத்து மணிக்கு சுந்தர மூர்த்தி முதலியாரை அங்கே வரச்செய்கிறது என்றும் அவர்கள் இருவரும் தீர்மானித்து ஒருவருக்கொருவர் கையடித்து உறுதி செய்துகொண்ட பின்னர், புஷ்பாவதி, வெளிப்பட்டு ஒசை செய்யாமல் நடந்து தனது படுக்கையறைக்குச் சென்றாள். தனியாக விடப்பட்ட செளந்தரவல்வி அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு முறுக்காக நடந்து கற்பகவல்லியம்மாள் படுத்திருந்த அந்தப்புரத்திற்குள் நுழைந்து, பக்கத்தில் இருந்த ஒரு கண்ணாடி விளக்கை கையில் எடுத்துக் கொண்டுபோய், கற்பகவல்லியம்மாள் படுத்திருந்த கட்டிலண்டை நெருங்கி நின்று விளக்கை அந்த அம்மாளது முகத்திற்கு அருகில் பிடிக்க, அதன் வெளிச்சம் பளிச்சென்று அவளது முகத்தில் தாக்கியது. அரை நித்திரையில் உணர்வு கலங்கிப் படுத்திருந்த கற்பக வல்லியம்மாள் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து கண்களைத் துடைத்துக்கொண்டு, வந்திருப்பது யார் என்று பார்க்க முயன் றாள்; விளக்கு நிரம்பவும் சமீபத்தில் இருந்தது. ஆகையால், நன்றாகப் பார்க்கமாட்டாமல், கண் கூசியது. சிறிது நேரம் சிரமப்பட்டு அவள் தனது கண்களை மெதுவாகத் திறந்து பார்த் தாள். செளந்தரவல்லி கற்பகவல்லியம்மாளிடத்தில் அதுவரையில் நெருங்கிப் பேசியதில்லை ஆகையாலும், கோகிலாம்பாள் சிறிது நேரத்திற்குமுன் தனிமையில் வந்து ஆகாரம் கொடுத்து உபசரித்துவிட்டுப் போனாள் ஆகையாலும், கோகிலாம்பாளது நினைவே கற்பகவல்லியம்மாளுக்கு உண்டாயிற்று. இரண்டு மடந்தையரும் ஒரே அச்சில் வார்த்தெடுக்கப்பட்டவர்கள் போலக் கொஞ்சமும் பேதமின்றி இருந்தமையாலும், கற்பக