உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னம் பற்கள் போனதும்.
மூர்ச்சை யான எதிரியைத்
தன்னந் தனியே விட்டுமே
தாவிக் கழுதை சென்றது!

தந்தி ரத்தின் மகிமையால்
தப்பிப் பிழைத்த கதைதனை
சொந்தக் காரர் கேட்டிடச்
சொல்லிச் சொல்லிச் சிரித்ததே!


57