உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகுந்து மேடைக்குச் செல்ல விரும்பின்ை ஒரு சிறுவன். அவன் கையில் தந்தத்தால் செய்த அழ கான ஒரு குல்லாய் இருந்தது. அதை அவன் எப்படியாவது நேருவிடம் சேர்த்துவிட வேண்டு மென்று துடிதுடித்தான். ஆல்ை, அவளுல் அந்தக் கூட்டத்தில் ஒர் அங்குலம்கூட முன்னேற முடிய కsులీషు, - நல்ல வேளையாகச் சிறிது தூரத்திலிருந்த ஒரு தொண்டர் இதை அறிந்தார். உடனே, அச்சிறுவன மேடைக்கு அழைத்துச் சென்ருர். நேருவின் முன்னே அவனைக் கொண்டுபோய் நிறுத்தினர். விஷயத்தைச் சுருக்கமாகக் கூறினர். உடனே, நேரு அன்போடு, மகிழ்ச்சியோடு அந்தச் சிறுவன் தந்த தந்தக்குல்லாயைத் தம் தங்கக் கையால் பெற்றுக் கொண்டார். அப்போது அவன் கண்களில் இருந்து மளமள வென்று நீர் வழிவதை நேரு 、莒.飙。 “ஏனப்பா அழுகிருய்?” என்று பரிவோடு கேட்டார். "நாணு ? அழுகிறேன? இது ஆனந்தக் கண்ணிர்!” என்ருன் அச்சிறுவன், கண்களைத் துடைத்துக் கொண்டே ! பாப்பாவுடன் விளையாட்டு புது டில்லியிலுள்ள குழந்தைகள் சங்கம் வெள்ளி விழா கொண்டாடியது. விழாவிற்கு நேருவை அழைத்திருந்தார்கள். குழந்தைகளின் ஆடல் பாடல்களே நேரு பெரிதும் ரசித்தார். பிறகு, பேசுவதற்கு எழுந்தார். குறைந்தது அரை மணி நேரமாவது அவர் பேசுவார் என்றே