நாகூர்முத்துப் புலவர் தனிப்பாடல்கள்
50 பாடல்கள்
தனிப்பாடல் திரட்டு மூலம் பக்கம் 196 முதல் 203
பாடலுக்குக் குறிப்புரை – செங்கைப் பொதுவன்
கட்டளைக் கலிப்பா
[தொகு]1
[தொகு]தனதனாக நடாத்தி அடர்ந்த பூச்சரத்தை வாங்கித் தனத்தில் தொடுக்கத்
தனத்தனாக தவிலான் மின்போன் மெய்பசந்த சந்துசந்தே சொலொன்றாண் மினாள்
தனதனா கணத்தொம் மெனப்பை யினிர்த்தம் புரிந்த சரண சரோருகா
தனதனாக வளரும் ப்ரதாப வித்தாரனே வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
2
[தொகு]கனதனங்கம் பிளந்தளிர் கொந்தளகங் களந்திருக்காய மின்மேல்மற்ற
கனகனங்கம் பிளந்தலை கண்டு கொங்கைக் குளேவினன் சேராத தென்கொலோ
கனகனங்கம் பளகோத்திரா வருட்காதலன் தனைக் காத்தடிமை கொண்ட
கனகனங்கம் பிளந்த நரசிங்க காகுத்தா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
3
[தொகு]கடகரிக்கும் மதனானவர் செயுங்காயந் தேர்ந்தனரோ வளவன்னைமார்
கடகரிக் குமரிவாழ்க வேலன்முன் கட்டினாரதி லென்னா மொன்னார்க்குவி
கடகரிக் குருவிக்கன்று கண்ணருள் கர்த்தர் தாளிணையைத் துதிநேமகா
கடகரிக்கு நிருபா விளசைவாழ் கர்ணைமால் வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
4
[தொகு]தந்தப் பாதுகடீர் மருங்கம்பிரு தாரையாம் இந்தமாதை மின்னார் சந்தம்
தந்நப் பாதுகனற்ற வரம்பு வேடானொளிக்கச் சரமுல்லை தாசரதி
தந்நப்பாது கவிப்பட்டம் வாலியைத் தாக்கியே யவன் தம்பிக்குத் தந்துதந்
தந்தப் பாதுகை தம்பிக்கு நல்கியதாரு வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
5
[தொகு]கனதனந் தனகாவலினா லந்தக்கனிக்கு மாமலையாமிடை மின்னலும்
சினதனந் தனமாற் கூறரி தரிதென்னு மல்குல் திருவை யணைகுவாய்
மனதனந் தனமாடை தமிழ் பகர்வாணர்க் கீந்துமகிழும் ப்ரதாபனே
தனதனந் தனவென்றாடுவோ ரருடங்கிவாழ் வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
6
[தொகு]இந்தக்கா வனங்கற்கோர் கவிகையா விருந்துகாந் துதியானென்ன செய்குவேன்
பந்தக்கா வனமம்மை கண்டப்பி யெப்படி யங்கேருவேன் பாங்கியென்றாள் கலி
சிந்தைக்கா வனசத்திர சோமதியாக சற்குணபாக மனோகரா
சந்தனக்கா வனஞ்சுழி ளசைப் பதித்தானமால் வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
7
[தொகு]இருபத் தந்தமெனும் பொற்பயோதர மென்ன சொல்லாதிக் கெண் மடங்கிவள்
சொருபந் தந்தச் சிவிகையில் வந்தனள் சொந்தமாக வுவந் தணைவாய் சுடர்
தருபந் தந்தமனிய வெற்புப் பெற்றிற்றாய்த் துலங்கித்தனை நம்புவோர்க் கெலாம்
நிருபந் தந்த மனதின்படிக் கருநேசனே வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
8
[தொகு]தரகலா தனங்கன் சமர்க்கோலஞ் சமைந்து பாணம் எய்தான் பூவலவர
கரகலா தனகும்பம் பொறுக்குமா கன்னியே யெனைக் காண்பாரென்றாள் புல
வரகலா தனன் மார்க்க சிலாக்கியமா வசந்ததியாக வரோதயா
பிரகலா தனன் உள்ளத்து இருந்தருள் பெருக்குமால் வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
9
[தொகு]மாதமந்திர ணம்போல் இருந்ததை மலைக் கொப்பாக வளர்ந்தது மாரன்கைச்
சூமந்திர வோருக மாமதி சோர்ந்து தானிந்த வேந்திழை வாடுமோ
போதமந்திர சக்கினியைக் கவ்விப் பொழிலில் தாவும் புகழ்க் கழுகாசல
வேதமந்திர மெய்க்குகனைத் தொழும் வெங்கடேசுர வெட்டம தீரனே.
10
[தொகு]வருதுகட்டு முட்டெல்லாங் கடந்து பூவாளிவேள் கயவாழி முரசம்
திருதுகட்டு வசன மலமலைத் தென்றலாங் கொடுந்தேரை நடாத்தியே
பொருதுகட்டு வதனத்திற் சாடவே பூத்தொடுத்தனன் சந்திர காவிடால்
விருதுகட்டு மதிபா விளசைவாழ் வெங்கடேசு ரெட்டேந்த்ர வசீகரனே.
11
[தொகு]தந்துகந் துகந்தாகந் தணிக்குநீர்த் தடமருங்கு தனமல்குல் தையலே
முந்துகந் துகந்தா கணப்போழ்தில் உன்மோகத் தூது மொழிவ னென்றே வந்தேன்
வந்துகந் துகந்தா கழுகாசல வாசகாவென வாழ்த்து முன்பாகட்டும்
கந்துகந் துகந்தாகப் புரட்டுங் கடாசலா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
12
[தொகு]நம்பரக்கரையா னனராகியநாதர் முன்புநமை வேண்டிச் செல்கவென்
றும்பரக்கரையா யனுப்பத்தனது உருவிலா மதன் யுத்தத்துக் கென்செய்வேன்
அம்பரக்கரையான் அதிற் பாளைய மன்றிறங்கி யடர்ந் திலங்காபுரி
வம்பரக்கரையா சுகத்தால் வென்ற மாதவா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
13
[தொகு]அத்தன் கண்ணுக்குத் தோற்றான்தன் மாதலால் அரி பிரம்மாதிக்குந் தோற்றான் அவன்மகா
எத்தன் மாமனை யென்றுந் தமையனென்றே சொல்வோன்கணை யெய்யாம லெய்கிறான்
கத்தன் பூவுலகு ஏழையுமே யொரு கவிகைநீழலில் காத்தருளும் பரி
சுத்தன் மன்னுல குமரா வெட்டேந்திரன் சோதரா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
14
[தொகு]உபையராசியை பூரும்பிரான்வள் ரோங்கநேருந் தனத்தாளுனை மகிழ்ந்
துபைய ராசியமாய்க் கூட்டிவா வென்று சொல்லி யென்னை யுன்பால் விடுத்தாள் பொன்னார்
சபையராசிற் சொரூபாவென் றீசரைத்தன் கையால் தொழுதுங் கன்கை வீடணற்
கபையராசி யருளவல்லவா புகழாகரா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
15
[தொகு]சங்கதா தரளங்கால் கமுகநாதன் கழுத்திணை யென்றாட் குன்றாரின்று
துங்கதா தரதிதாமதஞ் செய்யிலத் தோகை தேகத்தை மாரன் வருத்துவான்
அங்கதாதா நீதூது செல்லென்ற வாரியாரண வீரிய ப்ரதாபனே
வெங்கதாத ரவீமா செயதரா வெங்கடேசுர வெட்டம பூபனே.
16
[தொகு]பூவலாரை முதலான கற்பங்கள் புரிந்து நிட்டை வசித் திருந்தாலுமென்
ஆவலாரையும் விட்டுவிடா தந்த வரிப் பிரம்மாதிகள் ஆனாலுந் தானென
மாவலாரை மலரதினால் எய்யின் மங்கை யுள்ளம் மயங்கா திருக்குமா
மேவலாரை யடக்கிச் செயம்பெற்ற விசயனே வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
17
[தொகு]அஞ்சக் கஞ்சனங்கை பாலகன் அந்த சோகமேவ வடாவிடுகுமு
தஞ்சக் கஞ்சன மெல்லாங் கரைத்திரு தனத்தை நீலத்தடவரை யாக்கமான்
மிஞ்சக் கஞ்சனந் தாழக்குலுக்கு மெய்ம்மின்னை மேவி விரகந் தணித்திடாய்
வஞ்சக் கஞ்சனகத்தைத் துணித்தவா வாசவா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
18
[தொகு]கந்தரப் புயருஞ் சடையார் பகைக்காமன் வந்துகணை யேவவேமினாள்
அந்தரப் புயலின் பேர் மிகுத்தனள் அணையின் மீதணை வாயணை வாய்பர
தந்தரப் புயங்கப் பணிமீது தெய்வத் தென்றாடுஞ் சரணாம் புயாதிட
மந்தரப் புயபார செயதர வாசவா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
19
[தொகு]அந்தராசல வன்பன்றி போற் பகையார்ப் பரிக்க வவாக்கிசைந் தெய்துமின்
பந்தராசலனே பயந்தாள் வெறுப்பாய் உரைக்கிற் பலரென் சொல்லாருல
கந்தராசல வாவூரின் வாய்மறைக்க உலைமூடி யுண்டா கொண்ட காதல்தீர்
மந்தராசல வாகா சயதரா வாசவா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
20
[தொகு]முனச நங்கைமுகன் கண்ணிருந்துற முற்றும் வெந்தவன் வந்திகல் செய்யவே
தினச நங்கைக்குது கஞ்சிதட்டுது சேலை சோர்ந்திரு காலையும் பின்னவே
இனச னங்கையது கொட்டிக் கொட்டி வந்தேசவே மயன் மீசரமாகுது
வனச நங்கை மருவும் புயாடலா வாசவா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
21
[தொகு]படங்கு மாதங்க ரேக்காற் சமைத்திட்ட பாரக் கொங்கைக் குறியுஞ் சமீபந்தான்
சடங்கு மாதங் கழிக்கு முன்னாமிது சமயங் கட்டித் தழுவா விடிலவா
அடங்கு மாதங்கள் சித்தமென் பாக்கிய மணைய வேண்டு முன்னாண் மூலமென்னவே
தொடங்கு மாதங்க முன்வந்த மாதவா துங்கனே வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
22
[தொகு]வாசக்காந்தண் மலர்க்கை யினாலனை வாரிவாரிப் பன்னீரொடு சந்தனம்
பூசக்காந்தல் பொறாமல் அயர்ந்து வாய்புலம்பத் தாமமும் வெம்ப மின்னார்களும்
ஏசக்காந்தம் உரைக்கிலென் செய்குவா ளெய்துவாய் குறமாது தெய்வானைக் கோர்
நேசக்காந்த ரருள்பெற்று வாழ்மனு நீதனே வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
23
[தொகு]வந்துவார வையநடத்திச் சிலைவளைத்துச் சித்தசன் மாங்கணையே வம்பு
குத்துவார வளவும் பிதிர்ந்திடக் குடைந்து கொங்கைக் குடத்தையு மேயனே
கந்துவார மதாக்கி விட்டாலிந்தக் கன்னியென் செய்குவாள் காண் கவியினால்
சிந்துவார மதிலணை கண்டவா சீதரா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
24
[தொகு]அரசிரா வணத்தால் அடைத்துந் தொனியமரு தில்லையதை முனியுண்ணவும்
கரிசிரா வகலப் பகலோன் வருங் காலமான தெக்காலம் என்றாடரும்
பரிசிரா முழுலோப குடாரிநீ போரவில் வளைத்துக் கரதூஷண
திரிசிரா விழவோர் பாணந் தொட்டவா சீதரா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
25
[தொகு]தொடுக்க வத்திரம் வேளதுதான் இந்தத் தோகை மெய்யைத் துளைத்து ஊடுருவவே
கடுக்க வத்திரண் மேல்விழு மீயெனக் கலங்குவாட் குன்னலங்கல் இன்றீகுவாய்
இடுக்க வந்திரங் காவென்று அழைக்க வந்திடங் கரைத்திகிரிக் கிரையிட்டவா
உடுக்க வத்திரம் அல்லாதவர்க் கருளுத்தமா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
26
[தொகு]சீதமாரம் பனங்கன் றொட்டான் றனத்தினைத் துளைத்துத் தடாரிக்கு தந்தம்பு
சூதமாரம்பம் ராமாராமா வெனச் சொல்லுவேன் சந்துசொல்ல விம்மாதர்க்குள்
சீதமாரம் பலாதி செய்வார் எந்தன் னேமக் காமந்தணி மூலம் என்னவே
போதமாரம் பஞ்செய்ய முன்வந்தவா போசனே வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
27
[தொகு]பூசுகந்தந் தனத்தில் பொரிந்தது பொருக் கெழும்பி யிப்பூவை தன்மாலுக்கே
நீசுகந்தந் தடங்க லின்றித் தரநேமஞ் செய்திவள் காமந் தணித்திடாய்
தேசுகந் தந்த ராவணன் சேய்தலை சிக்கெனக் கொண்டுவா வென்று இலக்குவற்
காசுகந் தந்தராமா பெரும் புகழாகரா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
28
[தொகு]பொருப்புக் குஞ்சரியாகப் புடைத்தெழும் பூண்முலைக் கன்னிமீதே சமர்செய்யத்
துருப்புக் குஞ்சரியேறி மெய்யெங்கணுந் துளைக்க மாரன் வளைக்க வவன் செங்கைக்
கருப்புக் குஞ்சரி சாமநிழற்றுந் திங்கள் குடைக்கும் கலங்குவளோ மன
விருப்புக் குஞ்சரி காந்தற்கு வைத்தவா வீரனே வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
29
[தொகு]அடிதங்கச்சி யிவளென்னமோ தெரியாது சிந்தை யயருகிறா ளிந்தா
பிடிதங்கச் சிவிகையி லிருந்துநம் பிள்ளைதான் கிளிப்பிள்ளை யல்லோ மயல்
கொடி தங்கச்சிப் பரிபோல் சென்றே வரக் கூறென்றாள் இகல் கொண்டோர் அமர்கண்டு
துடி தங்கச்சி மையப்புயங் கொட்டு முத்துங்கனே வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
30
[தொகு]அரகதத்தை மதன்சிந்தை தன்னில் வைத் தம்பரத்தை யடித்தார்ப் பரித்துமே
துரகதத்தை நடத்தி யம்பாலு மென்று வதனத்தைத் துளைத்து விட்டான் கொண்ட
விரகதத்தை யெவர் தணிப்பார் மலர் மெத்தை மீதினில் வைத்து அணைவாய் மணி
மரகதத்தை யணியும் புயாசலா வாசவா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
31
[தொகு]அனங்கனம் பனந்தந்தொட மெய்பசந்த சந்து வாடுவதல்லா விடைக்கிரு
தனங்கனம் பனந்தாரான் இருக்கும் நற்றலத்தின் பேர்க்கொடி தாங்காது பெற்றதாய்
மனங்கனம் பனம்பின்போ மிகுத்தந்த மாதர் சொல்லும் வசைக் கிலக்காகிய
மினங்கனம் பனஞ்சேர் சூதமாயினாள் வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
32
[தொகு]மாதவாவின மட்டலர் நின்புய மாலை மாலை யகற்றுவதா சடை
யாதவாவினன் சொல்லுந் துராகத வன்னை வாயை யடக்குவதார் மலர்ச்
சீதவாவினந் தங்கந் தரமெனுஞ் செல்விக்கோர் மொழி சொல்சி யணைந்திடாய்
போதவாவினங் காத்தருண் மாதவா போசனே வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
33
[தொகு]இருதனங் கனிக்குச் சிலைபோற் புடைத்து எழுந்து விம்மி யிறுமாந் திடக்கயல்
விருதனங் கனிக்குச் சிலைவாங்கி மாவிசை கொண்டு ஊடுருவிப் பாயவாளியாற்
பொருதனங் கனிவர்க்கம் உண்ணாமன் மால் பூண்டிருக்கச் செய்தான் தமிழ் வாணர்க்கு
வருதனங் கனிவாய்த் தருமன்னவா வாசவா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
34
[தொகு]என்னிலங்குச் சலராச ராசருக்கேற்ற தாமவரிங்கே வருகப்போய்
முன்னிலங்கு நங்காரியம் யாவதுமொழி யென்றாள் பைங்கிளிதான் மருவுவாய்
நன்னிலங்கு வலையத்தி லீதென நாட்டுந் தென்கருக் கோட்டைக்கு அதிபனே
பொன்னிலங்கு மணிமார்பனே திடயோசனே வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
35
[தொகு]அரகரா சலங்கொண்ட புச்டோன் முலையானை விம்மவதிற் றென்றறாவவே
உரகரா சலவன் குளிராதன லுகுக்கிறான் அந்தமாரற்கிம் மாதருந்
தரகரா சலராசி யதாமயரா னெனைப் புணர்வாய் மூலமென்ற தோத்
திரகரா சலங்காத்த சக்ரேஸ்வரா சீதரா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
36
[தொகு]கஞ்சரஞ்சப் பெடைபோலு மென்னடை கமலத்தாள் இருகண் ணிணையானது
மஞ்சரஞ் சர்க்கரை வட்டுரை முலைப் பருபதத்தில் அறுபதத்தான் றொட்டான்
வெஞ்சரஞ்சப் பிரபஞ்ச கோளகை மீதிருந்திந்த மின்னாளை மேவுவாய்
வஞ்சரஞ்சப் பொருஞ் செயதோர்த் தண்டா வாசவா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
37
[தொகு]மாமனுக்கு மகனாக வந்த காமனுக்கும் பெற்று வளர்த்தவட்குங் கலைச்
சோமனுக்கும் இனத்தார்க்கும் அஞ்சி மெய்சோர்ந்து வாடினள் சேர்ந்தணை வாயினி
தாமனுக்கு மினிய குமாரெட்ட தருமனுக்குங் குமார முத்தேந்திர
பூமனுக்குஞ் சகோதரனே திடபோசனே வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
38
[தொகு]என்னவா விதுராசியமா நடையேலு மாமகள் காவொடு கான்மிகப்
பின்னவா விதுரா வன்றூவவா பிரமனிப்படிச் செய்தான் ஒன்னார்கள் வாய்
சொன்னவா விதுரா கதத்தென்றிசை குடிபுக்கஃ கையில் கோதண்டம் வாங்கிய
மன்னவா விதுரா புகழாகரா வாசவா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
39
[தொகு]சொலங்கக் காகொண்ட மோகத்தினால் வருஞ் சோபதாபந் துலைக்க வென்றாட்குமே
விலங்கக் காமசரத்தாலும் பூந்தளிர் மெய்யிளைத்தனள் அல்லாமல் ஒப்பிலா
நலங்கக் காரி சுகக்காரி மேவ்விந் நாளுமே நல்ல நாளடையார் மனம்
மலங்கக் கால்கொண் டடர்பரி மேல்வரும் வாசவா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
40
[தொகு]சரந்தரா தரங்கண்டா மதன் விடுத்தா னெனது குழந்தை தனியே மால்
பரந்தரா தரளக்கச் சிறுக்கும் பொற்பார் பயோதர பாரத்தைத் தாங்கவே
உரந்தரா தரவம் போற்றுவண் மருங்கொசியு முள்ளம் வசியா யணைந்திடாய்
புரந்தரா தரணிக் கதிபா செயபூதரா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
41
[தொகு]பீலிக்குஞ் சரவல்களைக் கொத்திப் பிடித்துத் தாக்கப் பெரும்பகை யின்றிக்கா
லாலிக்குஞ் சரபஞ் சிங்கமீது சென்றடிப்ப போல் வந்தடிக்குது தாயென்ற
நீலிக்குஞ் சரசர பேச்சுமாச் சிவநிணைவுங் காணுங் கனவும் இங்கேயொரு
வாலிக்குஞ் சரமேவிய ராகவா வாசவா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
42
[தொகு]அராவுக்கே கணையே செவியென் பரதல்ல பெற்றவனைக் கேமின்னா ருருவம்
பராவுக்கே கணையே குழலாக்கிய பண்ணுக்கே நொந்த பெண்ணுக்கு இரங்கியின்
றிராவுக்கே யணைமேற் சென்றிருந்து நல்லின்ப லீலை செய்தன்பாய்
மருவுவாய் மராவுக்கே கணை யேவிய ராகவா வாசவா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
43
[தொகு]அல்லைமாலை மருதங் கிளியை மின்னாரை நால்வகைத் தாளைய தாக்கிவிட்
டெல்லைமாலையும் விட்டடர்ந்தேறி நானிருக்கும் ஆலயத்துள் புகுந்தே தன்கை
வில்லைமாலை விளைத்து வளைத்து அம்பைவிட்டு வேண்டுமட்டு மீறினன் மேவுவாய்
முல்லைராலை யணி மாலைப் போற்றிய குமுணனே வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
44
[தொகு]தடிக்கவில்லை முலைதிரண்டே மகள் சமையவில்லை மணந்தான் குமுகுமென்
றடிக்கவில்லை பொடிபுனுகத்தர் சேர்த்தணிய வில்லை யதற்குமுன் மாரன்போர்
முடிக்கவில்லை வளைத்தாற் குழந்தைதான் மோகந்தாங்கவு முற்றா தொன்னார்துடி
துடிக்கவில்லை வளைக்கு மகோரவுத் துங்கனே வெங்கடேசுர ரெட்டேந்த்ரனே.
45
[தொகு]மஞ்சலக் கணங்கன் புறவேகட்டி மருவுதற் குளவாவைத் திருக்குநாள்
அஞ்சலக் கணலார்க்கே தெரியுநின் ஆவலோ லடங்கா திரங்காதவன்
நெஞ்சலக் கணகப் பெற்றியின் வெண்ணெயா நிலவில் வந்து கலவி செய்வா யையா
பஞ்சலக் கணமுத் தமிழாகர பாஷிதா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
46
[தொகு]சத்திக்கும் பணிலக் கையினான் பெற்ற தனயன் போர்க்கு வினைய மின்னாரைச்சு
மத்திக்கும் பணியாய் நிரைத்துச் சரமாரி பெய்யவென் மானுரை தானுரைக்
கத்திக்கும் பணி சோர்ந்த்துங் காண்கிலாள் காதல்தீர விப்போதணை வாயையா
எத்திக்கும் பணிவேந்தா மகாமண்டலேசுரா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
47
[தொகு]தனதுமெய்க்கு மலரணையானது தழலிறைக்குந் தனச்சுமையால் இடை
மினதுமெய்க்குந் துவளுமிம் மானந்த மேனகைக்கும் வெகுமிச்ச நானுண்மை
சொனதுமெய்க் குமரன் பொற்பதாம் புயந்தொழுந் தொழும்பன் குமாரெட்ட பாண்டியன்
மனதுமெய்க்கு முயிர்த்துணைவா புகழ்வாசவா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
48
[தொகு]இட்டங்கட்டிய வாறே யல்லாது வேறில்லை சிந்தை யிதெல்லாஞ் சுவாமிய
திட்டங்கட்டிய பரஞ்சியார் செய்தசித்ர மஞ்சத்திற் சேர்வாய் தினஞ்சட்ட
வட்டங்கட்டி யங்கக் குடிக்கின்ற ராவணனை வென்றவன்பு வைத்தவன் தம்பிக்குப்
பட்டங்கட்டிய ராமா நவரச பாஷிதா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
49
[தொகு]பருதியானவர் ஈராறுபேருங் கோபாக்னி மிஞ்சி வருவது போன்மதி
வருதியான தற்காற்றேன் என்றாளையோ மலடிருந்து பெற்றேனிந்தப் பிள்ளையை
ஒருதியான மதுகுல தீபம்போல் உதித்து மோகத்துக்கு உள்ளாகினா ளையா
குருதியான் மறவாதவா புகழ் கொற்றவா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.
50
[தொகு]அம்பமா முனிவாய் முலைக் கண்ணைச் சல்லடைக் கண்ணாக வனங்க னெய்யச் சொர்ன
விம்பமா முனிருந்த படிக்கிலை மேனிமாகலைக் யானியிவளையா
கம்பமா முனிதம் பெறவந்து தற்காத்தவா வெகுநேர்த்தியதாந் தமிழ்க்
கும்பமா முனிபோல் வந்துதித்தவா கொற்றவா வெங்கடேசு ரெட்டேந்த்ரனே.