உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

காற்றில் வந்த கவிதை


மாம்பட்டை
மரப்பட்டை
மக்களாடும்
தென்னம்பட்டை
அத்தி கொண்டு
பூசைகொண்டு
கவ்வாளத்தான்
கவுட்டி
காலு மேலே
மண் வெட்டி...... மண் வெட்டி

மண்வெட்டி, மண்வெட்டி என்று மூச்சிழுக்கும்வரை சொல்லிக்கொண்டே தொட முயல்வார்கள்.


அடியடி வாழை
ஆலாங் குருத்து
பக்கக் கன்று
படி வாசக்கல்

படிவாசக்கல், படிவாசக்கல் என்று கூறும்போது பாட்டில் பொருள் இல்லையே என்று தோன்றலாம். விளையாட்டுக்கு இந்தப் பாடல் உதவுகிறது. அதற்காகத்தானே இந்தப் பாடல்? பொருளைப்பற்றி விளையாடுகின்ற யாரும் கவலைப்படுகிறதில்லை.

இன்னும் ஒரு பாடலைப் பார்க்கலாம்.

புறாப் புறா முட்டையிட
புறாச் சங்கிலி கட்டியிட