பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

பொருப்பு - மலை. ஐயன் ஒருவன் தரும் மால் என -தல்லவியின் வேறுபாட்டுக்குக் காரணன் தலைவன் ஒருவன் தந்த காதல் என்று. மையை அழித்தால் - ஆட்டைப் பலி கொடுத்தால், மடவரவின்கண் வனப்பு உறுமே - இந்தத் தலைவியிடம் போன அழகு உண்டாகுமா? விரக நோயால் அழகு குலைந்து வருந்தும் இவள் நோயின் காரணம் அறிந்து மணம் செய்து கொடுத்தாலன்றி, இந்த ஆட்டைப் பலி கொடுப்பதால் பழையபடி அழகு பெறுவாளா என்றபடி

கண்ணிலுள்ள மையை அழித்து விட்டால் இந்தப் பெண்ணினுடைய கண் அழகு பெறுமா என்று வேறொரு பொருள் தொனித்தது. மடவரலின்கண் பெண்ணினிடத்தில், பெண்ணின் கண்கள்.

கோட்டை துருக்கம்

மருக்கொண்ட நீபத் தொடையினன்

காத்த மலையினரில்வேள் - - சுருக்கென்று தைக்கும் பகழியாற்

செய்யமர்ச் சூழலிலே குருக்கொண்ட மேனி இவள் இன்னல்

கண்டிலள்; கோட்டையுறு துருக்கம் கெடுத்தனள். தாய்; அவள் பேதைமை சொல்வதென்னே. மருக் கொண்ட நீபத் தொடையினன் - மணத்தைப் பெற்ற கடம்ப மாலையை அணிந்த முருகன். வேள்காமன். பகழியால் - மலரம்பினால், செய் அமர்ச் சூழலிலே - செய்கின்ற போர் சூழ்ந்த நிலையில். குருநிறம். இவள் - இந்தத் தலைவியினது. கோட்டை உறு துரு கம் கெடுத்தனள் - கொம்பைப் பெற்ற ஆட்டின் தலையை வெட்டச் செய்தான். அவள் பேதைமை