பக்கம்:பாரதித் தமிழ்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஸத் திரட்ரு

காளிதாஸன்

10 ஜனவரி 1923 ரெளத்திரி மார்கழி 27

நிறவேற்றுமை

அமெரிக்காவில் செந்நிற இந்தியர் என்ற ஜாதி யாருடன் அங்கு புதிதாக ஐரோப்பாவினின்றும் குடியேறிய வெண்ணிற மனிதர் ஒத்துவாழ முடியா மல் அவர்களைச் சுட்டழித்த செய்தி, ஆஸ்த்ரேலியா வின் புராதனக் குடிகளை வெள்ளையர் அழித்து முடித்த செய்தி, ஒரு நீகிரோவன் ஒரு வெள்ளே ஸ்திரீயை விரும்பில்ை அவனைச் சட்டப்படி விசாரணை செய்யாம்ல் ஜனங்கள் அடித்தும் கல் லெறிந்தும் கொல்வதாகிய்-இன்றைக்கும் அமெரிக் காவில் உள்ள அனுஷடர்னம், ஐரோப்பியரின் ஆட்சிக்குட்பட்ட இந்தியா முதலிய இதர நிறத்தா ருடைய நாடுகளில் நிறவேற்றுமை காரணமாக ஏற்படும் அநீதிகள், அமெரிக்காவிலும் கனடா விலும் ஜப்பானியரும் இந்தியரும் குடியேறி யிருப்ப தால் அங்குள்ளவருக்குண்டாகும் பொருமை, குடி யேற்ற நாடுகளில் ஆசியாக்காரருக்குச் செய்யப் படும் கொடுமைகள் இவற்றாலெல்லாம் நிறவேற் நுமை பற்றிய பேத உணர்ச்சிகள் சில நூற்றாண்டு களாக வெள்ளையரிடம் ததும்பிக் கிடப்பதாக நிச்ச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/411&oldid=605830" இலிருந்து மீள்விக்கப்பட்டது