166
இதழ்கள்
166 இதழ்கள் அம்மா இரக்கம் இல்லாமல் மேலும் பின் என்ன, நாம் எல்லாம் தேவாம்சமா? சிரஞ்சீவி வரம் வாங்கிக்கொண்டு வந் கிறோமா? நீயுந்தான் ஒரு நாள் என் வேளை வரும் போது-” என்பாள். 'அம்மா அம்மா, அப்படிச் சொல்லாதேயுங்கள் எனக்குப் பயமாக இருக்கிறது.” உஷை விக்கி விக்கி அழுவாள். அம்மா வின் முகத்தில் ஆயிரம் அர்த்தங்களுடன் புன் சிரிப்பு தோன் றும். குருவின் உடலில் ஆயிரம் தேள்கள் பிடுங்கும். ஒரு சமயம் உஷைக்கு உடம்புக்கு வந்துவிட்டது. ஒன்றும் விபரீதம் இல்லை. வாயைக் கட்டாத கோளாறினால் அபத் தியம் நேர்ந்து, மார்புச் சளி கட்டிக்கொண்டு, இருமலில் கொண்டுவிட்டது. பாறையாய் உராய்ந்துகொண்டதால், கடும் கழலாமல் லொக்கு லொக்கென ஒயாமல் இருமல் அவ் வளவுதான். உஷை ஒரு கையை உதறிக்கொண்டு, 'நான் இனி மேல் பிழைக்கமா ட்டேன். என்னை என் பிறந்த வீட்டில் கொண்டு போய் விடுங்கள். இந்த வீட்டு வைத்தியம் ப் பிடிக்கவில்லை" என விசித்தாள். அந்த நிமிஷத்தை இப்பொழுது நினைத்தால் கூடக் குரு வுக்குக் கண்னெதிரில் மின்னல்கள் கிளை பிரிந்து பாய்ந்தன. அம்மா அப்போது மருமகளின் கையைப் பிடித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்வையில் சிந்திய கேலி தாங்க ধু"}" முடியாமல் குரு தலை குனிந்தான். அம்மா ஊருக்கே நாடி பார்ப்பாள். வைத்தியனே அம்மா விடம் வந்து யோசனை கேட்டுக்கொள்வான். மூண்டெழுந்த ஆவேசத்தில் குருவுக்குக் கண்ணை இரும் டிற்று. நாற்காலியைத் தள்ளிக்கொண்டு எழுந்தது தான் தெரியும். உஷையின் கன்னத்தில் அவன் கை பட்டபின் தான் பட்டது தெரிந்தது. அந்த அதிர்ச்சியில் அவன் திகைத்துங் போன்ான், ‘ஏண்டா அவளை அடிக்கிறாய்?” அம்மாவின் குரல் சன்னமாய் இழைந்தது, "அவள் சொல்வதும் சரிதான்! பிறந்தகத்துக்குப் போய் விட்டுத்தான் வரட்டுமே! நமக்கு ஏன் பொல்லாப்பு?