உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இதழ்கள்

鬆辯 இதழ்கள் ஆதுகிலும் ஒற்றிக் கொள்கின்றன. அம்மாவுக்குப் பொறுக்க மூன்:வில்லை. உள்ளே போய் அப்படி அப்படியே வெண்கலப் பானையோடு சாதம், கற்சட்டியோடு குழம்பு, ஈயச் ம்ேபோடு ரசம், தட்டோடு கறியால், உருளியோடு பாயசம் எல்லானற்றையும் கொண்டு வந்து என் திைரே வைக்கிறாள். “இத்தா தின்னு, தின்னு இப்படியே தின்னு.” என் வெறி கப்பென அடங்கிவிடுகிறது. நான் எழுந்து உட்காருகிறேன். ஏனங்களைத் தொட்டுத் தடவித் தவிக் கிறேன். இதெல்லாம் இப்படியே சாப்பிட்டுவிட வழி இல்வையா? அப்பாவும் அம்மாவும் கொஞ்ச நாழி இந்தக் காட்சியை மேளனமாய் அனுபவிக்கிறார்கள். திடீரென அப்பாவின் முகம் மாறுகிறது. "பூரிமதி. உள்ளே கொண்டு போய் வை. உடன்ே வேச்சூடு! இதென்ன வேடிக்கை வேண்டியிருக்கிறது. வைாமிக்கு நைவேத்யம் பண்ணுகிற மாதிரி எடு எல்லா இற்றையும்!” அப்பா வந்து என்னருகே உட்கார்ந்து என் கையில் ஒரு வடையைக் கொடுத்துவிட்டு என் முதுகைத் தடவுகிறார். தன்மேல்துண்டால் என் மூக்கின் ஒழுகலைத் துடைக்கிறார். X X -X X ஆனால் இது வயிற்றுப் பசி மாத்திரம் இல்லை. வயிறு இனத்திரம் இவ்வளவு பசிக்க முடியாது. கூட வேறு ஏதேதோ பசிகள். திண்ணமாய் இன்னெனப் புரியாத ஏதேதோ தாயங்கள். கோபங்கள், பொறாமைகள், ஏக்கங்கள் எல்லாம் இவ்வயிற்றுப் பசி மூலம் ஒரளவு தங்கள் தங்கள் நிறைவு கிர்ண்வோ விடுதலை பெறவோ முயல்கின்றன. எனத்தே அப்பவே, கொஞ்சம் தெரிகிறது. குழந்தை தொட்டிலில் கண் அயர்கிறாள். அம்மா, தாலாட்ட முனகியபடி இலேசாய்த் தொட்டிலை ஆட்டு அம்மா வாய்விட்டும் நன்றாய்ப் பாடுவாள். ஆயினும் எங்கோநினைவாப் முனகுகையில், அதைவிட நன்றாயிருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/140&oldid=1247238" இலிருந்து மீள்விக்கப்பட்டது