பக்தியால் பரவசப்பட்டுப் பாடிய சைவ அடியார்களைப்போல, வைணவ ஆழ்வார்களைப் போல, புலவர் என்.வி.கலைமணி அவர்கள், தமிழ்த் தாயின் அமிழ்த மகன், அறிஞர் அண்ணா அவர்களைத் தமிழால் அஞ்சலி செய்திருக்கின்றார். ஏதாவதொரு புதிய திருப்பத்தைத் தமிழ் பெற்றிருக்கின்றதா இந்த தாவில் என்பதை, எதிர்காலம்தான் பதில் கூற வேண்டும். செஞ்சொத் கவிதயம் கலந்த இந்த நூலின் உரைநடை, அதன் தடைச் சித்திரம், படிப்போர் உள்ளத்தையும் கேட்போர் நெஞ்சத்தையும் எளிதிலே ஈர்க்கவல்லக் காந்தக் கல்லாகத் திகழ்கின்றதெனலாம். பேரறிஞர் அண்ணா அவர்களை, இயற்கைச் சக்திகளோடு ஒப்பிட்டு, அதனதன் பணிகளை அவருக்குள் ஆழ்த்தி, அடக்கி, இந்நூல் பேசுவதால், இதனைப் படிக்கின்ற தமிழன்பர்கள், புத்தம் புதிய ஓர் இலக்கியக் கொத்தின் புகழ்மணத்தை நுகர்பவர்களாகக் காட்சியளிப்பார் கன் என்பது திண்ணம். அறிவுலக அணியில் ஒரு சகல கலா வல்லமை படைத்தத் தலைவதைப் பற்றிய தத்துவ வித்தக விளக்கங்களோடு, "தமிழஞ்சலி" அமைத்துள்ளது. அதனால்தான், இந்த நூலுக்கு அணிந்துரை அளித்த தினமணி கதிர் ஆசிரியராகப் பணியாற்றி, மறைந்த திரு விந்தன் அவர்கள், மனம் திறந்து, விருப்பு வெறுப்பின்றிப் பாராட்டி மகிழ்ந்துள்ளார். தமிழஞ்சலி என்ற இந்த நூல், தமிழ் அரசி நூலகம் சார்பாக, முதல் வெளியீடாக வெளிவர, எமக்கு ஆலின் வித்துபோல் விளங்கும் தமிழ் அரசி ஆசிரியர் பெருந்தகை ம.நடராசன் எம்.எ. அவர்கட்கு எமது வணக்கத்தையும் நன்றியையும் தமிழஞ்சலி செய்கிறோம். தமிழ் அரசி நூலகம் உருவாக, தனது இதயத் துடிப்புகளை ஊக்கத் துருத்தியாக மாற்றி, அவ்வப்போது எமது செயற்பாடுகளுக்குச் சூடேற்றி, ஆக்கத்திற்கு வழியாகத் திகழ்ந்து, இந்த தமிழஞ்சலி நூல் வெளிவரக் காரணமாக இருந்த, வரலாற்று நாவலுலகத்தின் வாகை தாயகனாக நடமாடும், கலைமாமணி விக்ரமன்அவர்கட்கும் எம்.நன்றியை தவில்கிறோம். தமிழ் அரசி # தலகம் தந்துள்ள முதல் வெளியீடான இந்த நூலைத் தமிழுலகம் வரவேற்கும் என்று நம்புகிறோம். & - பதிப்பகத்தார் Vị
பக்கம்:தமிழஞ்சலி.pdf/8
Appearance