பக்கம்:தமிழஞ்சலி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலவற்றை எழுதிப் புகழ் பெற்றார். காலஞ்சென்ற இளங்கோவன். மூன்றாவதாக, எனக்குத் தெரிந்த வரை தாங்கள் தான் அந்த நடைச் சித்திரத்தைத் தமிழஞ்சலியில் வெற்றிகர மாகக் கையாண்டிருக்கிறீர்கள். மெத்த மகிழ்ச்சி : தொடர்ந்து எழுதுங்கள். ஆனால் பேரறிஞர் அண்ணாவைப் பற்றி எழுதியதோடு நிற்க வேண்டாம். இதே தமிழஞ்சலி முறையிலேயே, சர்வதேச தலைவர்களும்பிரமுகர்களுமான சர்ச்சில், ஸ்டாலின், மகாத்மா காந்தி, நேரு, இந்திரா, திலகர், ராஜாஜி, போன்றவர்களோடு, நாவலர், கருணாநிதி, ஆகியோரையும் சேர்த்துக் கொண்டு சிறுசிறு உரைநடைச் சித்திரங்களாக எழுதி, அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிடுங்கள். தமிழ் நாட்டு இலக்கிய உலகில் தங்களுக் கென்று ஒரு தனி இடம் நிச்சயம் கிடைக்கும். எல்லாத் தரப்பிலிருந்தும் கிடைக்கும். நல்லது. மற்றவை நேரில், எப்போதாவது சந்திக்கும்போது! அன்புடன் வி. கோவிந்தன் - (ஒப்பம்) குறிப்பு : 'தினமணி கதிர் ஏட்டின் ஆசிரியராகப் பணியாற்றிய, காலஞ்சென்ற திரு.விந்தன் அவர்கள், 1911-ஆம் ஆண்டில் தமிழஞ்சலி கையெழுத்துப் பிரதியைப் படித்தார்.அவர் மனம் திறந்து பாராட்டிச் சூட்டிய அணிந்துரை இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/7&oldid=863632" இலிருந்து மீள்விக்கப்பட்டது