பக்கம்:தமிழஞ்சலி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை விந்தன் "தினமணி கதிர்” சென்னை - 2 அருமை நண்பர் திரு கலைமணி அவர்கட்கு வணக்கம். நேற்றிரவேதங்கள் தமிழஞ்சலி'யைப் பாதிக்குமேல் படித்து விட்டேன். மற்றவற்றை இன்றிரவு படித்து முடித்த பின்னரே இந்தக் கடிதத்தை எழுத வேண்டுமென்று முதலில் நினைத்தேன். அதற்குள் மனத்தில் பட்டதை எழுதிவிடவேண்டும் என்ற ஏதோ ஒர் உள்ளுணர்வு - எழுதுகிறேன். இதற்கு முன் தங்களையோ, தங்கள் எழுத்தையோ, நான் பார்த்தவன் அல்ல, படித்தலன் அல்ல என்றாலும், எவ்வளவு அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்! சில இடங்களில், உலகப் புகழ் பெற்ற கவிஞர் தாகூரின் கீதாஞ்சலி'யைக் கூடக் கருத் துச் செறிவில், சொல்லாட்சியில் தூக்கிய டித்திருக்கிறீர்களே! தங்கள் தமிழஞ்சலி அருமையான நடைச் சித்திரம்' இந்த நடைச் சித்திரத்தைத் தமிழில் முதன் முதலாகக் கையாண்டு பார்த்தவர் அமரர் வ.ரா. அவர் அதில் அவ்வளவு வெற்றி பெற்றார் என்று கூற முடியாது. அவரைத் தொடர்ந்து, தாம் நடத்திய -"நட்சத்திரம்' என்ற ஏட்டில் நடைச் சித்திரங்கள்' jv

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/6&oldid=863616" இலிருந்து மீள்விக்கப்பட்டது