இதழ்கள்
139
இதழ்கள் #39
அம்மா கரண்டியை வெண்கலப் பானையுள் போடுவதற் குள் எனக்குத் தாங்கவில்லை. பசி வயிற்றுள் தேளாய்ப் பிடுங்குகிறது. அலறுகிறேன். 'இன்னிக்கு உன்னைப் புலியைக் கட்டி இழுத்துப்பிடு வேன். படவா. காக்காய்க்குப் போடவேண்டாமா?” 'நான்தான் போடுவேன்’ என்று அழுச்சாட்டியம் வண்ணுகிறேன். தொலைச்சுக்கோ' அம்மா சின்னத் தட்டில் வைத்துக் கொடுக்கிறாள். தான் தட்டைத் துக்கிக்கொண்டு முற்றத்துக்குத் தத்தித்தத்தி நடந்து செல்கிறேன், அப்பாவின் கிலேசம் தட்டிய குரல் என்னை எட்டுகிறது. "என்ன இப்படிச் சீவனற்றுப் போயிடுத்து எப்படி யிருந் தான். எப்படி ஆகிவிட்டான்? சப்பை எப்படி ஒட்டிப் போப் விட்டது ப்ார்த்தையா?” "என்ன பண்ணுகிறது? சவலைஎன்றால் இந்த அவஸ்தை தான்!” தோய்க்கிற கல்லடியில் புதைத்த கடப்பைக் கல்மேல சாதத்தைக் கொட்டுகிறேன். அதில் பருப்பும் நெய்யும் காலை வெய்யிலில் பளபளக்கின்றன. நர்ன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டுச் சாதத்தில் அந்தப் பாகத்தை மாத்திரம் விண்டு வாயில் போட்டுக் கொள்கிறேன். சிரிப்புப் பீறிடும் சப்தம் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பு கிறேன். என் முகத்தில் வழியும் திருட்டைப் பார்த்து அப்iா அம்மா இருவரும் சிரிக்கிறார்கள். பசி, பசி, அதென்ன பசியோ எனக்கே புரியவில்லை. தின்னத் தின்ன இளைக்கிறேன். வயிறு மாத்திரம் விகார மாய்ப் புடைத்துக் கொள்கிறது. அப்பவும் பசி திரவில்லை. ஒரு பண்டிகை தினம். இலையைப் போட்டுத் தண்ணீர் தெளிப்பதற்குள் பசி தாளவில்லை. கைகால்களை உதைத் கொண்டு கூடத்தில் புரண்டு புரண்டு அழுகிறேன். : கோலங்களின் வடிவங்களும் செம்மண்ணும் என்.வயிற்றி