26
கவிக்குயில் சரோஜினியின்
திருத்த எழுச்சி எண்ணங்களும் இடையிடையே தோன்றி வளர்ந்தன.
டாக்டர் கோவித்தராஜுலு சரோஜினி தம்பதிகளுக்கு குழந்தைகள் நால்வர் பிறந்தனர் தனது குழந்தைகளுக்கு கவிதையுணர்ச்சியுடன் இளம்கவி சரோஜினி பெயர் சூட்டினார்.
தனது குழந்தைகளுக்கு அவர் பெயரிட்ட சம்பவத்தை பற்றிப் பாடல்களை இயற்றியுள்ளார். இதோ அப் பாடலின் உட்பொருள்:
'ஜயசூரியா' இது அவர்களது மூத்த மகன் பெயர் கதிரவனைப் போல் ஒளிபடைத்தவனே! கவி புனைவதிலும், நாட்டுக்குச் சேவை செய்வதிலும், ஜெயசூரியா உனது பெயருக்கு ஏற்ப வெற்றிக் கொடி நாட்டி வா! என்பார்!
இரண்டாவது பெண் குழந்தை; பெயர் பத்மஜா; இவர் மேற்கு வங்கக் கவர்னராகப் பணியாற்றியவர்; பத்மஜா தாமரையில் வாழும் பெண்மணியே மலர் மகளாம் திருமகள் உனக்கு எல்லாத் திருவினையும் ‘நல்கிடுவாளாக’ என்றார்!
மூன்றாவது ஆண்மகன்; பெயர் ரணதீரன்!
போர்க் களத்தில் வீரத்துடன் விளங்குவோனே; இராமாயணத்தில் வருணிக்கப் பெறும் வீர புருடர்க்ளை நிகர்த்து, நின் வாழ்க்கைக் களத்திலே அறம் வழுவாது முன்னேறுவாயாக! அன்பில் நின்றிடுவாயாக! என்று வாழ்த்துவார்.
இறுதிப்பெண் லீலாமணி, உள்ளத்தில் உவகையூட்டும் நீலமணி நிகர்த்தவளே, நின் பெயருக்கு ஏற்ப செம்மை நெறியில் ஒளிருவாயாக இடுக்கண் ஏதுமின்றி என்றும்