உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இதழ்கள்

120 இதழ்கள் அவளுக்குப் பசி தாங்கவில்லையென்று எப்போது கண்டு கொண்டாரோ, மாமியார் தன்னிஷ்டப்பட்ட போதுதான் சாப்பிட வருவார், அந்தப் போட்டியில் சாதம் ஆறிப் போய் முள்முள்ளாய் விறைத்துக் கொண்டாலும் அவருக்கு அக்கறை யில்லை. அவளுக்குக் கண்ணில் உசிர் வந்து நின்ற பிறகு. உதட்டையமுக்கி தனக்குள் ஒரு சிரிப்பு சிரித்துக்கொள்வார். “சரி, இலையைப் போடறது, தட்டை வெச்சுக்கறது; இந்த நாளில்தான் நாம் பசிச்சப்போ சாப்பிட முடியல்வியே. பிறத்தியார் வயத்தைப் பார்த்து, நம்ம வயத்துக்குக் கொட்டிக்க வேண்டியிருக்கு!--’ பெரியவாள் எப்பொழுதுமே என்ன வேனுமானாலும் சொல்லலாம். அவர்கள் சொல்வதில் நியாயம் இருக்கோ இல்லையோ, அவாளுக்குப்பெரியவாள் என்கிற அவர்களுடைய ஸ்தானம் மாத்திரம் கெட்டி. அதை வெச்சிண்டு அவர்கள் யார்மேல் இருக்கிற ஆத்திரத்தையெல்லாம் யார்மேலே வேனுமானாலும் தீர்க்க வழி பார்த்துண்டு அட்டம் செய்ய லசம், அம்மாவுக்கு யார் மேலே ஆத்திரம் இல்லை? முதலில் அவருடைய கணவன், தன் மாமனார் பேரிலேயே ஆத்திரம் பொங்கி வழிந்தது. அம்மாவுக்கும் பிள்ளைக்கும் ஒருநாள் விட்டு ஒருநாள் நடக்கும் தர்க்கங்களில் அடிபடும் பழைய ஏடுகளிலிருந்த அப்படி இப்படியென்று முன்னும் பின்னுமாய் விஷயங்கள் வெளிவரும். கூட்டுக் குடும்பத்தில் வெகுநாள் கஷ்டப்பட்ட பிறகு, எப்படியோ தங்களைப் பிரித்துக்கொண்டு வந்த பிறகு, பத்து மாதம் சேர்ந்தாப்போல் குடித்தனம் நடத்தவில்லை. பஞ்சுப் பொதியில் பொறி வைத்தாற்போல், கண்ணப்பன் சிவதரி சனம் கண்டாற்போல், மாமனாருக்குத் திடீரென்று தேசத் தொண்டில் ஆர்வம் நேர்ந்துவிட்டது. உத்யோகத்தைத் துறந்து, இயக்கத்தில் இறங்கினார். எங்கேயோ ஊர் தள்ளி, உள்ளேயும் தள்ளி விட்டார்கள். உள்ளே போனவர் வெளியே வரவேயில்லை. ஒரு மாஸம் இரண்டு மாஸம் கழித்து ஒரு கடிதம் வத்தது. உங்கள் கணவர் திடீரென நேற்றிரவு சிறையில் காலமாய்விட்டார் என்பதை வருத்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/120&oldid=1247218" இலிருந்து மீள்விக்கப்பட்டது