பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ராஜம் கிருஷ்ணன்

19


கலப்பினத்துக்குத்தங்கள் வண்ணங்களையும் வனப்பையும் நல்கியிருக்கிறார்கள்.

இத்தகைய சமுதாய முன்னேற்றம் ஒருபுறம் இருக்கையில், இன்னொரு மரபும் தோன்றி வந்து இணைந்தது. இனக்குழுக்களிடையே, ஒரு பெண்ணைத் தன் வாழ்க்கைக்கு உரிமையாக்கிக் கொண்டு ஒவ்வொருவரும் பயனடைய முடியாத நிலையும் இருந்தது. உடல்வலிமை, பொருள் வலிமை இரண்டும் இல்லாத சிலர், போருக்கும் மோதலுக்கும் வாழ்க்கையில் இடமில்லை என்று முடிவு செய்தனர். கானகங்களில் தனியிடங்களை நாடிச்சென்றனர். மனித வாழ்வின் பல்வேறு பிரச்சனைகளைச் சிந்தித்தனர். மனதை ஒடுக்கி, மேலாம் அறிவொளியைப் பெறச் சிந்தனை செய்தனர். புதிய தத்துவங்களைக் கண்டனர். இவர்களின் படைப் பாற்றல், கவினுறு ஒலிக்கோவைகளாக, அற்புதப் பாடல்களாக வெளிப்பட்டன.

பல்லாண்டுகள், இயற்கையின் மடியிலே உள்ளொளி காணப்பயின்ற இப் பெரியோர், தாம் பெற்ற அநுபவங்களை, அறிவை, குழுமக்களுடன் பகிர்ந்து கொண்டு பயன் பெற முன் வந்தனர். இவர்கள் தலைமையில் குரு குலங்கள் தோன்றின. இவர்களே ருஷீ, முனி என்ற சிறப்புச் சொற்களால் வழங்கப் பெற்றனர். இவர்கள் துறவிகள் அல்லர். இத்தகைய சான்றோருக்குப் பெண்களைக் கொடுத்து அவர்கள் வாயிலாகச் சந்ததி பெறச் செய்வது மேலாம் புண்ணியமாகக் கருதப்பட்டது. ‘கன்யா தானம்’ என்ற சொல்லே இந்த மேன்மையைக் குறிக்கிறது. பிரும்ம முறை, தெய்வமுறை, பிரஜாபத்திய முறை, அர்ஷமுறை, ஆகிய திருமண முறைகள் எல்லாமே, ஓர் ஆணுக்கு இல்லறம் நடத்தி சந்ததி பெருக்குவதற்காக, வாழ்க்கைத் துணையாக ஒரு பெண்ணை அளிப்பதாகவே உணர்த்துகின்றன.

இந்தத் திருமண முறைகளில் சிற்சில வேற்றுமைகள் இருக்கலாம். அர்ஷ ‘திருமணம் ஒரு பெண்ணைத் தானம்’