புலவர் என்.வி. கலைமணி to 23 முதலாக உலகுக்கு அவர்தான்் அளித்தார்.
இந்த தத்துவம், 'ஜியோமிதி நடைமுறைக் காரியங்களுக்கு உதவிடும் விஞ்ஞானமாக அன்று முதல் நடமாட ஆரம்பித்தது.
'கப்பல்களைக் கடலில் ஒடவிட உதவியது. வான நூல் விதிகளிடையேயும் அந்த தத்துவம் வலம் வந்தது, நிலங்களை அளப்பதற்கும், பிரமிடுகளைக் கட்டுவதற்கும் அது பயன்பட்டது.”
எகிப்தியர்கள் கையாண்ட நில அளவைக் கயிற்று. முறைகளை வேடிக்கைக்காகவும், விளையாட்டுக் காகவும், வியந்து பாராட்டியவர் கிரேக்க ஞானி தேவிஸ்.
அதற்குப் பிறகு, அந்த பேரறிஞரே அந்த விளையாட்டையும் வேடிக்கையையும் அறிவினால் ஆதிக்கம் செலுத்தி வந்தார்.
அந்த அறிவாதிக்கம்தான்், அவனிக்குப் புதியதோர் அறிவியலாதிக்க அரசையே அமைத்துக் காட்டி விட்டது - கணிதத் துறையில்!
ஒரு சிக்கல், சாதாரண அறிவு படைத்த ஒரு மனிதனிடம் இருக்கும் போது, அது வெறும் முடிச்சாக மட்டுமேதான்் தெரியும்.
அதே சிக்கலே, பொறுமையோடு அவிழ்க்கத் தெரியாத அறிவற்றவனிடம் சிக்கும்போது, குழப்பமான பல முடிச்சுகளை மேலும் பெற்று, பெருஞ்சிக்கலாக உருவெடுத்து, கடைசியில் அவிழ்க்கவே முடியாத முடிச்சாக மாறி, பைத்தியம் பிடிக்கும் எரிச்சலையும் வெறுப்பையும் உண்டாக்கி விடுகின்றது.