பொன்மனச் செம்மல் புகழ்பாடும் நன்னூல் இந்நூல்!
அணிந்துரை
வாழையடி வாழையென வந்த வள்ளல்!
வரலாற்று ஏடுகளில் வாழும் அண்ணல்! ஏழையரின் நெஞ்செல்லாம் நிறைந்தி ருக்கும்
எம்.ஜி.ஆர். புகழ்பாடும் இந்நன் னுலோ தாழைமணத் தமிழ்பேசும்; தென்றல் வந்து
தாலாட்டுப் பாடவரும்; எழுத்தெல் லாமே ஆழிமுத்துப் போலொளிரும்; சிந்த வைக்கும்
அமுதுகட்டும் கருத்துக்கள் புதைந்தி ருக்கும்!
வல்லிருட்டைத் துடைத்துமுழு மதியம் வானில்
வத்துலவும் காலம்நிலாக் கால மாகும்! மெல்லினத்துக் கொடிசெடிகள் பூச்சி ரிப்பால்
மேதினிக்கே எழில்கூட்டும் வேனிற் காலம்! செல்வத்தின் செல்வாக்கின் செழுமை யாலே
சோழர்களின் காலம்பொற் கால மாகும்! சொல்லினத்தை அலங்கரித்த காஞ்சித் தேவன்
தேரோட்டக் காலம்தம் கால மாகும்:
மலைமணியாய் விளங்குவது இமயம்! எங்கள்
மறைமலையோ தமிழ்மலையாய் விளங்கு கின்றார்!
குலமணியாம் அண்ணாவின் வழிந டந்து
குன்றெடுத்த புகழனைத்துத் திரைவானத்தின்
கலைமணியாய் விளங்கியவர் எம்.ஜி.ஆரே!
கருணைமனத் தேவனவன் புகழைப் பாடும்