பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

ஹிராடெடஸின்



கி.மு. 414 ஆம் ஆண்டு வரை அங்கே வாழ்ந்த பின்பு, மீண்டும் வரலாற்றுச் செய்திகளைச் சேகரிக்கப் புதிய பயணத்தை மேற்கொண்டார். இறுதியில் அவர் தனது நூலை முடிக்க முடியாமலேயே கி.மு.408 ஆம் ஆண்டில் மீண்டும் ஏதென்ஸ் நகர் வந்தபோது, தனது 76 ஆம் வயதில் இறந்தார்.


3. தமிழர் புகழ்

‘வரலாற்றின் ஆதித் தந்தை’ என்று, உலகப் பெரு நாவலர் சிசிரோ என்பவரால் ஹிராடெடஸ் பாராட்டிப் போற்றப்பட்டவர். வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு முதல் வழி காட்டியாக விளங்கியவர் அவர் வரலாற்றின் ஆதித் தந்தையாக மட்டும் சிறந்தவர் அல்லர்; ஐரோப்பிய உரைநடையின் ஆதித் தந்தையாகவும் திகழ்ந்தவர்.

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் நாட்டிலே இருந்து படகேறிச் சென்ற தமிழர்களே பினீசியர் என்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை ஹிராடெடஸ் தனது ‘வரலாறுகள்’ என்ற நூலிலே குறிப்பிட்டு, தமிழ் மக்களுக்கும் - பண்பாடுகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் - பெருமை தேடித் தந்தார்.

படகு ஏறிக் கடல் கடந்து சென்று, பினீசியா நாட்டிலே தங்கி வாழ்ந்து, பனைமரத் தொழில்களை அங்கே, பயிரிட்டுச் செய்து வந்ததால், அவர்கள் பாமேசியர் என்று அழைக்கப்பட்டார்கள் என்றும், அந்தப் பாமேசியர்கள் தான் நாளடைவில் பினீசியர்கள் என்று உலக நாட்டவரால் குறிப்பிடப்பட்டவர்கள் என்றும் ஹிராடெடஸ் தனது ‘வரலாறுகள்’ என்ற நூலிலே எழுதியுள்ளார்.

எனவே, நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டுக்கு ஒரு வரலாறு இல்லை என்ற நிலையை மறுத்து, “4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டிலே இருந்து புறப்பட்டு, கடல்வழியாக உலகின் பல பகுதிகளுக்கும் சென்று,