உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குக்கூ.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொதுவுடைமைக் குழுவில் இருந்தபோதும் அக்குழுவின் திறனாய்வாளர்கள் இலக்கியவாதிகளுக்குச் செய்து கொடுத்த இரும்புச் சட்டையை அணிந்துகொள்ள அவர் தயாராய் இல்லை.


காதலைப் பாடுவது உலக மகாக் குற்றம், மன்னிக்க முடியாத சமூகத் துரோகம் என்று முற்போக்குத் திறனாய்வாளர்கள் சர்வாதிகாரச் சட்டங்களை இயற்றிக் கொண்டிருந்தபோது அவர் , துணிந்து, 'கனவுகள்+ கற்பனைகள்-காகிதங்கள் என்ற காதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.


'முற்போக்குத் திறனாய்வாளர்கள் உங்களைத் தூக்கிலே போடுவார்கள்; வேண்டாம் என்று அவரை நான் எச்சரித்தேன்.


அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் எதிர்பார்த்தது போல் முற்போக்காளரிடமிருந்து மீராவுக்குக் கல்லடி கிடைக்கவில்லை. மாறாகப் பூங்கொத்துக்கள் கிடைத்தன.


இதற்குக் காரணம் மீரா அவர்கள் குழுவைச் சார்ந்தவர் என்பதுதான். குழு மனப்பான்மை எந்த அளவுக்கு நேர்மையற் றிருக்கும் என்பதற்கு இது ஒர் உதாரணம்.


'கனவுகள்.... ஒரு மரபை உண்டாக்கி (Trend setting), அதைப் பின்பற்றி ஏராளமான வசன கவிதைக் காதல் தொகுதிகள் வெளிவரச் செய்தது என்பது ஒரு வரலாற்றுப் பதிவு.


மீராவின் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு புதிய நவில் முறையை (way of expression) பார்க்கலாம்.


கனவு....களின் உள்ளடக்கம், உருவம் இரண்டிலி மிருந்து வேறுபட்டிருந்தது, அதன் பின்னால் வந்த 'ஊசிகள்.

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/6&oldid=1234009" இலிருந்து மீள்விக்கப்பட்டது