பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை

கால்டுவெல்துரைமகனார் எழுதிய திராவிட மொழி ஒப்பிலக்கணம் (Comparative Grammar of Dravidian Languages) என்ற ஆங்கில நூலையும் தமிழில் மொழிபெயர்த்தவர்.

உயர்நிலைப் பள்ளிப் பணியின் போதே இத்தகைய நன்மாணவ மணிகளை உருவாக்கினார் என்றால், பின்னர்த் தியாகராசர் கல்லூரிப் பேராசிரியராக அமர்ந்தபோது எத்தகைய தமிழ் உணர்வுள்ள இளைஞர்களை உருவாக்கியிருப்பார் என்று ஊகித்துக் கொள்ளலாம்!

கழகத் தொடர்பு

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துடனும் அதன் ஆட்சியாளர் வ. சுப்பையா பிள்ளையுடனும் உரைவேந்தர் கொண்ட தொடர்பு மிக நெடிது. 1939 ஆம் ஆண்டில், உரைவேந்தர், வடார்க்காடு மாவட்டம், போளூரில், மாவட்டக் கழக உயர்நிலைப்பள்ளித் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்த சமயம். அப்போது மாவட்டக் கல்வி அதிகாரியாக இருந்த ச. சச்சிதானந்தம் பிள்ளை, அப்பள்ளிக்குப் பார்வையிட வந்தபோது, உரைவேந்தரின் இலக்கண, இலக்கியப் புலமையையும், மாணவர் உள்ளம் ஈர்க்குமாறு கற்பிக்கும் திறனையும், சித்தாந்தச் செந்நெறிப் புலமையினையும், நேரிற்கண்டு வியந்தவர், சென்னையிலிருந்த வ.சுப்பையா பிள்ளையைக் கண்டு, உரை வேந்தரைப் பற்றி வியந்து கூறினார். இத்தகு பெரும் புலமை பெற்றவரின் தொடர்பு, தம் கழகத்திற்குத் தேவையென உணர்ந்த சுப்பையா பிள்ளை, ஒருநாள் போளூருக்குச் சென்றார்; ஆனால் உரைவேந்தர் அப்போது ஊரில் இல்லாமையால், மடல் ஒன்று எழுதி, உரைவேந்தரின் துணைவியாரிடம் கொடுத்துவிட்டுத் திரும்பினார். உரைவேந்தர், அம்மடலைக் கண்டு மகிழ்ந்து, சென்னைக்குச் சென்று, கழக ஆட்சியாளரிடம் உரையாடியதன் விளைவாக, முதற்கண் 'சீவக சிந்தாமணிச் சுருக்கம்' நூல் எழுதியனுப்ப இசைவளித்தார். அந்நூல் அச்சானதும் அடுத்தடுத்துப் பல நூல்கள், கழகத்தின் வழி வெளிவந்தன!

அரிய ஆராய்ச்சியாளர்

உரைவேந்தர், தமது தமிழ் ஆய்வுக்கு ஏற்ற அருங்களம் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த வேளையில் திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் ஆராய்ச்சியாளர் பணி கிடைத்தது! இரண்டாம் போர்க்காலத்தில் 1942இல் அப்பணியில்