இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிதை
❖
காலநதியிலே கனவுப் படகு
❖
இ. முத்துராமலிங்கம்
பழைய இலக்கண நூல்கள் வகுத்துள்ள தடத்திலிருந்து இன்றைய தமிழ்க்கவிதை வேகமாக விலகிச் செல்ல ஆரம் பித்துவிட்டது. பல மொழி இலக்கியப் பாதிப்பும் ஆங்கில இலக்கியப் பயிற்சியும் இதற்கு அடிப்படைக் காரணங்கள் எனலாம். காலப்போக்கில் பழமை புறக்கணிக்கப்படு வதும், புதுமை அவ்விடத்தைக் கைப்பற்றிக் கொள்வதும், அப்புதுமையே பழமையாவதும் அலைமீது அலையைப் போல் அடுத்தடுத்து வருவதும் எல்லாவற்றிற்கும்
90