இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பிறமொழிப் படைப்பாளிகளில் சரத் சந்திரரும் தாகூரும் காண்டேகரும் அறிமுகம் ஆன அளவுக்கு அண்டை மொழி களான தெலுங்கு, கன்னட, மலையாளப் படைப்பாளிகள் நமக்கு அறிமுகம் ஆகவில்லை. அவர்களைச் சரிவர அறிமுகப்படுத்தும் முயற்சி இப்போதுதான் தொடங்கி யுள்ளது. தெலுங்கு மொழியின் சிறந்த படைப்புகளை அறிமுகப்படுத்திய இளம் பாரதியின் பணி பாராட்டுக் குரியது. 'அடுத்த வீடு' என்று அவர் இந்நூலுக்குப் பெயரிட் டிருப்பதும் அதற்கேற்ப 'அடுத்த வீட்டு விவகாரங்களைச் சுவைபடச் சொல்லும்' தன் மனைவிக்கு இந்நூலைக் காணிக்கையாக்கியிருப்பதும் மும்மடங்கு பாராட்டுக்குரியது.
எனக்கு தெலுங்கோ மலையாளமோ தெரியாது. ஆனால் இரண்டும் தெரிந்த இளம்பாரதியை நன்றாகத் தெரியும். நண்பர் இளம்பாரதியிடம் கேட்கின்றேன்: "மலையாளக் கதைகளை எப்போது தரப்போகிறீர்கள்?"
口 பிப்ரவரி, 1974
89