பக்கம்:பாரதித் தமிழ்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாஞ்சாலி சபதம்

1912-ல் பாஞ்சாலி சபதம் முதற் பாகம் புதுச் சேரியிலுள்ள வித்யாபிவிர்த்தினி அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப் பெற்றுள்ளது.

இந்நூலின் முகவுரையில் காணப்படும் கருத் துக்கள் தமிழில் புதிய இலக்கியம் எவ்வாறு உருவாக வேண்டும் என்று பாரதியார் விரும்பினர் என்பதை நன்கு காட்டுகின்றன. ‘எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றின யுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோளுகின்றான். ஒரிரண்டு வருஷத்து நூற் பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துத் குள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்தல் வேண்டும்.’

‘காரியம் மிகப் பெரிது; எனது திறமை சிறிது. ஆகையால், இதனை எழுதி வெளியிடுகின்றேன். பிறருக்கு ஆதர்சமாக அன்று, வழிகாட்டியாக’

திறமை சிறிது என்று அவர் அடக்கத்தோடு கூறிக்கொண்டாலும் எடுத்த காரியத்தை அற்புத மாக, ஒர் அம்சத்திலும் குறைவு நேரிடாதபடி வெற்றியோடு செய்து முடித்திருக்கிறார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/134&oldid=605394" இலிருந்து மீள்விக்கப்பட்டது