பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

57





10
மூவர் கண்ட முருகன்


1. நக்கீரர் கண்ட முருகன்


இருஞ் சேற்று அகல் வயல்
விரிந்து வாய் அவிழ்ந்த
முள்தாள் தாமரைத்
துஞ்சி, வைகறை
கார் கமழ் நெய்தல்
ஊதி, ஏற்படக்
கண் போல் மலர்ந்த
காமர் சுனை மலர்
அம்சிறை வண்டின்
அரிக்கணம் ஒலிக்கும்
குன்று அமர்ந்து
உறைதலும் உரியன்

என்று முருகனுக்கு ஒரு விளக்கம். விளக்கம் தருபவர், கடைச்சங்கப் புலவர்களுள் தலையாய நக்கீரர். நாம் இந்த விளக்கம் பெறுவது அவர் இயற்றிய திருமுருகாற்றுப் படையில். இதைப் படித்த ஒரு அன்பர் "என்ன சார்” ஒன்றுமே புரியவில்லையே, குன்று அமர்ந்து உறைதலும் உரியன் என்று ஒரு சொல் தொடர் மாத்திரம் தானே புரிகிறது. திருமுருகாற்றுப்படை முழுவதுமே இப்படித்தானே இருக்கிறது. முருகாற்றுப்படையை பாராயணம் பண்ணினால் முருகன் அருள் பெறுவோம் என்ற ஒரே நம்பிக்கையில் தானே பலர் இதைப் பாராயணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இதை கொஞ்சம் எளிதாகவே சொல்லக் கூடாதா? சொல்ல முடியாதா” என்று மிக்க