உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

உவமைக்கவிஞர் சுரதா


மேற்படி நூல் : நூல் உடல்நூல் (1934)
உடலின் பொது அமைப்பு பக்கங்கள் - 67
Windpipe - காற்றுக்குழல்
Gullet - இரைக்குழல்
Larynx - குரல் வளை

வாயின் பின்புறத்திலிருந்து தொண்டை வழியாகச் சுவாசப் பைக்கு ஒரு குழல் செல்கிறது. அதற்குக் காற்றுக் குழல் (Windpipe) என்று பெயர். அதற்குப் பின்னேதான் இரைக்குழல் (Gullet) செல்கின்றது. காற்றுக் குழலின் மேற்பகுதி குரல் வளை (Larynx)யெனப்படும்.

மேற்படி நூல் : நூல் உடல்நூல் (1934)
உடலின் பொது அமைப்பு பக்கங்கள் - 7
Foramen Magnum – பெருந்துளை

கபால எலும்புகளுக்குக் கீழாகவுள்ள விசாலமான அறையில் மூளை இருக்கிறது. கபாலத்தினடியில் பெருந்துளை (Foramen magnum) என்னும் பெரிய வட்டவடிவமான துவாரமிருக்கிறது. அது முதுகுக் கால்வாயோடு

மேற்படி நூல் : நூல் உடல்நூல் (1934)
எலும்புச் சட்டம், பக்கம் -9
Joints - பொருத்துக்கள்

உடம்பில் பலவகையான பொருத்துக்க ளுள்ளன. ஒன்றின் மேலொன்று நழுவுதற்கேற்றவாறும் கதவுக் கீல் போலப் பொருந்தி அசைதற்கேற்றவாறும் பந்தும் கிண்ணமும் போல் பொருந்துதற் கேற்றவாறும் சுழியாணிபோல் பொருந்துமாறும் பொருத்துக்கள் அமைந்துள்ளன.

மேற்படி நூல் : நூல் உடல்நூல் (1934)
பொருத்துக்கள் - பக்கம், 15, 16