உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாத இதழ் கட்டுரைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் தமிழர் மூதாதை, என் தமிழர் பெருமான, இராவணன் கான்ற என்ற ஓர் இனமான, பாடலைப்பாடி வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் எழுச்சியைச் செய்த முதற்பாவலர் நீரல்லவோ! தமிழால் இரு நனைந்தவர்கள் எல்லாம் தமிழுக்கே பகையாகி உமிழ்ந்த அவர்தம் கவிதைகளைக் கண்டு உலகம் சிரித்த போது, இந்திக்குத் தமிழ் நாட்டில் ஆதிக்கமாம்? நீங்கள் எல்லோரும் வாருங்கள் நாட்டினரே செந்தமிழ்க்குத் தீமை வந்த பின்னும் இந்த நேரம் இருந்தொரு லாபமுண்டோ?" என்று உலக வரலாற்றில் முதன் முறையாக மொழிப் போருக்குப்புறப்பாட்டு நடை பாடலை எழுதி செங்களம் காண கட்சிபேதமின்றி தமிழரை அழைத்த புரட்சிக் கவிஞர் யார்?பாவேந்தரைத் தவிர! பூ என்னும் நகத்தாலே-புலி உடம்பைக் கீறி, சூடான ரத்தத்தில்- இந்தக் கவிதைகளை சித்திரக் கவிதைகளை உருவாக்கக் கவிதைகளை பனையோலைப்பள்ளத்திலே, படிக்குங்கால், கற்கண்டாகி, முக்கனிச் சாறாகி, கேட்குங்கால் பூச்செண்டாகி, செவிகளிலே நின்று நிலைத்த தமிழகத்தில், தமிழுக்கும், பண்பாட்டுக்கும் வந்தேறிய பகை ஆட்சித் தமிழுடன் வழக்காட நினைத்தபோது, பாவேந்தர் எப்படி பா. இயற்றினார் தெரியுமா? கிழக்கைக் கிறி எழுந்த-செங்கதிர்போல், எழுத்துகளை எழுச்சியாக்கி, அசையை அரிமாவாக்கி, ஒலிக்குடும்பம்தனை ஒழுங்காக நிரவி பாட்டால் தன்னையே பரவ வைத்து, பழங்காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற காலக் கணக்கைக் கடந்து, உடலில்லாமல் போனாலும் உலவி, உயிர்ப்பாய் நின்ற பழம் புலவர்களைப்போல புரட்சிப் பாடல்களை எழுதி, நமக்குப் புத்துணர்வை ஊட்டியவர் பாவேந்தர். வெடிக்கும் எரிமலையை வெங்காயத் தோல்போல் உரித்த நெடியால்- அந்த நொடிப்பொழுதில் ஓரின எதிர்ப்பை அடிமுடி,ஆடிடஅதிர்ந்திட, விழிநீரை வீழ்த்தும் ஆற்றல் படைத்தவர் கவிக்கோ! பிளந்த பூகம்பத்தைத் தனது பின்னி வரும் சந்தத்தால் தைத்துப் பழக்கப்பட்ட விந்தைக் கவிஞர் பாவேந்தர்! புயற்காற்றை எடுத்து, அதற்கு முயற்பொறுமை தந்து, பாட்டு வயலிலே விளையாட விட்டு வேக வேடிக்கையைப் பார்த்து புதுவை அரிமா புதுமை 'பா'புள் அவர்! காலையிலே கதிர் முளைக்கத் தவறிவிட்டால்; கனல் போர்த்திக் கிடக்கும் கவிதை ஒன்றைப் பாவேந்தர் கட்டளையிட்டால்அது ககன பவனி வந்தால் - போதாதா ? கடும் கோடையை கொட்டிட: கோலநிலா கொஞ்சம் காலம் கடந்து வருவதாகத் தகவல் கிடைத்தால் சந்தன சந்தத்தால் - சந்திரனை உருவாக்கி, நிலா வருகின்ற வரையில் நீ, நின்று - சந்தன ஒளி தாlஎன்று அம்புலிக்கே ஆணையிட்ட காலக் கவிஞர் பாவேந்தர் ! மேகம் முரண்பட்டு, முத்து இறைத்தன போல், கொட்டிக் கிடக்கும் மீன்கள், குறுவிழி தன்னை மறைக்குமானால், பாவேந்தர் - தனது எழுத்துகளை வாரி வாரி இறைத்து, அவற்றைவிண் மீன்களாய் எரிய வைப்பார்! விடியல், சற்றுக் களைப்பால் விழி மூடி, துக்கக் கலக்கத்தில் துவண்டுத் துங்கி விட்டால், அறிவுக்கிகAழ

  • ... . . ~ 、//

గ్లో- (34D, 2006