32
முதுமைக் காலத் தொல்லை, பூச்சிகளினால் ஏற்படும்
இவ்வாறு உழைக்கும் மக்கள் என்ன இயந்திரங்களா? இயந்திரங்களையும் மெஷின்களையும் துடைத்து, அழுக்கு நீக்கி, எண்ணெய் போட்டு அடிக்கடி கண்காணித்தால் தான் அந்த இயந்திரங்கள் கூட நன்றாக உழைக்கும். உழைக்கும் மக்களுக்கும் நல்ல லாபத்தைத் தரும்.
மெஷினையே அவ்வளவு கண்காணிக்க வேண்டி இருக்கிறது என்றால், மனிதன் நிலை என்ன? கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டிய பிரச்சனை அல்லவா இது?
மனிதர்களாகிய நமது உடல்களில் பலவிதமான கோளாறுகள், நோய்கள். எதிர்பாரா ஆபத்துக்கள். விபத்துக்கள் வருவது நியாயம் தானே!
உழைக்கும் உடல் திடகாத்திரத்துடன் இருக்கும் என்றாலும், அந்த உடலுக்கு முதுமை வந்தால், வயதுகள் அதிகமானால், உடல் தளர்ச்சி ஏற்படுவது இயற்கை
உடல் இளைப்பு. களைப்பு, சலைப்பு எல்லாம் ஏற்படும்! காரணம், உடல் சோர்வு, தளர்வு எல்லாம். வாலிப உணர்வுகளை பலவீனமடையச் செய்வதை நாம் பார்க்கிறோம்.
வாலிப எழுச்சி, உணர்ச்சி எல்லாம் அடங்கி, முதுமை அவனை தளர்ச்சியிலே தள்ளும்போது வாழ்க்கையின் மகிழ்ச்சியை இழக்கின்றான்.
அதற்குக் காரணம் அவனது உடல் உறுப்புகள் எல்லாம் உழைத்து உழைத்து தேய்மானம் அடைந்ததால் தான் அந்த உழைப்பாளி தளர்ச்சியால் மகிழ்ச்சியை இழக்கின்றான்!
ஒருவன் உழைப்பால் செல்வம் வரலாம் போகலாம். ஆனால் உடற்கட்டு வருமா? வளமான வாலிப முறுக்கு வளருமா தேயுமா? எண்ணிப் பார்த்தால் உண்மையை நாம் உணரலாம்.